ஐ.சி.சி Team of the Tournament : நடப்பு உலககோப்பையின் சிறந்த பிளேயிங் லெவன் வெளியீடு – 3 இந்திய வீரர்களுக்கு இடம்

Team-of-the-Tournament
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசியின் எட்டாவது டி20 உலக கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. கடந்த அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி துவங்கிய இந்த டி20 உலக கோப்பை தொடரானது நேற்று நவம்பர் 13-ஆம் தேதியுடன் மெல்போர்ன் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடிய அனைத்து அணிகளின் வீரர்களையும் வைத்து தற்போது ஐசிசி சிறந்த பிளேயிங் லெவனை வெளியிட்டுள்ளது. அது குறித்த முழு பட்டியலும் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் இந்த தொடர் முழுவதுமே இங்கிலாந்து அணிக்கு சிறப்பான துவக்கம் கொடுத்த அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜாஸ் பட்லர் ஆகியோர் துவக்க வீரர்களாக இந்த பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டும் இன்றி மூன்றாவது இடத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நான்காவது இடத்தில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் நியூசிலாந்து அணியின் அதிரடி வீரரான கிளென் பிலிப்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தொடரில் அவர் ஒரு அரைசதம் மற்றும் ஒரு சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் ஆல்ரவுண்டர்களாக ஜிம்பாப்வேவை சேர்ந்த சிக்கந்தர் ராசா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த ஷதாப் கான் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தொடரின் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களாக தொடர் நாயகன் சாம்கரன், தென்னாப்பிரிக்க வீரர் நோர்க்கியா, இங்கிலாந்து வீரர் மார்க் உட் மற்றும் பாகிஸ்தான் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : இந்தியா வேர்ல்டுகப் ஜெயிக்கனும்னா மொதல்ல அவங்களுக்கு இந்த பர்மிஷன் குடுங்க – ஸ்டீபன் பிளமிங் கருத்து

அதோடு இந்த அணியின் 12-வது வீரராக இந்திய அணியை சேர்ந்த முன்னணி ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement