கொரோனா எதிரொலி : திட்டமிட்டபடி இந்தியாவில் டி20 உலகக்கோப்பை நடைபெறுமா ? – ஐ.சி.சி அறிக்கை

Cup
- Advertisement -

ஆடவருக்கான 20 ஓவர் உலக கோப்பை டி20 தொடர் இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடந்த ஐசிசி திட்டமிட்டது. அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் இந்த டி20 தொடரை காண மிகவும் ஆவலாக உள்ளனர். அதிலும் குறிப்பாக இந்திய ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் சந்தோஷமாகவும் உள்ளனர். இந்தியாவில் இந்த டி20 தொடர் நடக்க இருப்பதால் நிச்சயம் இந்திய அணிக்கு அது சாதகமாக இருக்கும்.

- Advertisement -

எனவே இந்த டி20 தொடரில் இந்திய அணி நிச்சயமாக கோப்பையை கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளதாக இந்திய ரசிகர்கள் ஒரு பக்கம் எதிர்பார்த்து கொண்டு வருகின்றனர். ஆனால் கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் காரணமாக இந்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுமா என்பது குறித்த கேள்வி தற்போது எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு கொரோனோ வைரஸ் அதிகமாக பரவியதை விட இந்த ஆண்டு இரண்டு மடங்கு அதிகமாக பரவி வருகின்றது. ஒரு மாதத்திற்கு முன்பு கொரோனா வைரஸின் தாக்கம் மிகக் குறைவாக இருந்தது. இந்தியாவில் நாளொன்றுக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 10,000க்கும் கீழாகவே இருந்து வந்தது. ஆனால் கொரோனா வைரஸ் என் இரண்டாவது அலை தற்பொழுது அடிக்க ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் தற்போது நாள் ஒன்றுக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

T20 wc

இப்படி இருக்கும் பட்சத்தில் இந்தியாவில் இந்த டி20 உலக கோப்பை தொடரை பாதுகாப்பான முறையில் நடத்தி விட முடியுமா என்பது குறித்து ஐசிசி தற்பொழுது தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐசிசி தரப்பிலிருந்து வந்த செய்தியின் படி, ஐசிசி தற்போது டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான இறுதிப் போட்டியை மிக பாதுகாப்பான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளது.

Ganguly

அதன்பிறகு டி20 உலகக்கோப்பை நடத்த திட்டமிட்டுள்ள திட்டத்தின்படிதான் உறுதியாகச் செல்வோம். எங்களிடம் மாற்று திட்டம் உள்ளது. அதுகுறித்து இன்னும் யோசிக்கவில்லை. நாங்கள் பிசிசிஐ-யுடன் இணைந்து இதுகுறித்து ஆலோசித்து வருகிறோம். அதற்கான நேரம் வந்தால் மாற்று திட்டத்தை செயல்படுத்துவோம்.அது முடிந்தவுடன் நிச்சயமாக டி20 தொடர் எப்போது, எங்கு நடத்துவது குறித்த ஆலோசனை விரைவில் எடுக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

Advertisement