- Advertisement -

டெஸ்ட் போட்டிகளின் மீது ரசிகர்களின் கவனத்தை அதிகரிக்க ஐ.சி.சி எடுத்த புதிய முடிவு- விவரம் உள்ளே

முன்பெல்லாம் கிரிக்கெட் போட்டி என்றால் டெஸ்ட் போட்டி தான் நினைவுக்கு வரும். ஒரு கிரிக்கெட் வீரரின் உணமையான திறமையினை டெஸ்ட் போட்டிகளின் மூலமே அறிய முடியும் என்று வரலாறு கூறுகின்றது. ஆனால் தற்போதைய டி20 போட்டி மற்றும் ஷார்ட் பார்மேட் கிரிக்கெட் போட்டிகளால் டெஸ்ட் போட்டிகள் குறைந்து கொண்டே வருகிறது. மேலும், அழிந்து கொண்டே வருகிறது என்று கூட சொல்லலாம்.

இன்றைய நவீன வாழ்க்கையில் மக்களின் பொழுதுபோக்குக்கான நேரம் குறைவே. அதனால், டி 20 போட்டிகள் சிலமணி நேரங்களில் முடிவதால் மக்கள் அதனையே ரசித்து பார்க்கிறார்கள். டெஸ்ட் போட்டிகள் மொத்தம் 5 நாட்கள் நடைபெறுவதால் அதனை மக்கள் பார்ப்பதை மெல்ல மெல்ல தவிர்த்து வருகிறார்கள்.

- Advertisement -

இதனை சரிசெய்து ரசிகர்களின் பார்வையை மீண்டும் டெஸ்ட் போட்டிகளின் மீது கொண்டுவர ஐ.சி.சி. தற்போது ஒரு புதிய முடிவினை செய்துள்ளது. அதன்படி : டெஸ்ட் போட்டிகளின்போது இரு அணிவீரர்களும் வெள்ளை நிற ஜெர்சியினை மட்டுமே அணிந்து இதுவரை விளையாடி வருகின்றனர். அதில் ஒரு நாள் போட்டிகளில் பயன்படுத்தப்படும் ஜெர்ஸியை போன்று பெயர் மற்றும் நம்பர் ஆகியவை டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தபடும் ஜெர்சியில் இடம்பெறுவதில்லை.

ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இனி டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் ஜெர்சிகளில் இனி வீரர்கள் தங்களது பெயர் மற்றும் லக்கி நம்பரை பதிந்து விளையாடலாம் என்று ஐ.சி.சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஆகையால் இனிமேல் டெஸ்ட் போட்டிகளில் புதிய டெஸ்ட் சீருடையினை எதிர்பார்க்கலாம்.

- Advertisement -
Published by