இதெல்லாம் கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல ஐசிசி நடவடிக்கை எடுக்கணும், போட்டி முடிந்த பின்னும் நாக்பூர் பிட்ச்சை விமர்சித்த இயன் ஹீலி

ian healy virat kohli
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* (4) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. அதனால் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பையும் இந்தியா பிரகாசப்படுத்தியுள்ளது. முன்னதாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பை ஏற்கனவே உறுதி செய்து விட்ட ஆஸ்திரேலியா 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் வரலாற்றில் முதல் முறையாக தங்களை சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியாவை இம்முறை அவர்களது சொந்த மண்ணில் சாயத்து பழி தீர்க்கும் எண்ணத்துடன் இத்தொடரில் களமிறங்கியது.

IND

- Advertisement -

ஆனால் பொதுவாகவே ஆஸ்திரேலியர்கள் ஸ்லெட்ஜிங் செய்வதற்கு பெயர் போனவர்கள் என்ற நிலையில் 2017 இந்திய சுற்றுப்பயணத்தில் பயிற்சி போட்டிகளுக்கு ஒரு வகையான மைதானத்தை கொடுத்த பிசிசிஐ முதன்மை போட்டிகளில் வேண்டுமென்றே தங்களை தோற்கடிக்கும் எண்ணத்துடன் சுழலுக்கு சாதகமான மைதானத்தை அமைத்திருந்ததாக ஸ்டீவ் ஸ்மித் கடந்த மாதமே விமர்சித்திருந்தார். அந்த நெருப்பில் எண்ணெயை கொஞ்சம் ஊற்றிய முன்னாள் வீரர் இயன் ஹீலி இம்முறையும் அதே போன்ற நியாயமற்ற மைதானம் இருக்கும் என்பதால் 2 – 1 (4) என்ற கணக்கில் இந்தியா தான் வெல்லும் என்று விமர்சித்தார்.

மீண்டும் விமர்சனம்:
அத்துடன் இந்தியாவை நம்பாமல் பயிற்சி போட்டிகளை தவிர்த்து விட்டு சிட்னியில் வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான பிட்ச் உருவாக்கி ஆஸ்திரேலி அணியினர் பயிற்சி எடுத்ததாகவும் அவர் விமர்சித்தார். அந்த நிலைமையில் முதல் போட்டி நடைபெற்ற நாக்பூரில் தங்களது இடது கை பேட்ஸ்மேன்களை இடது கை ஸ்பின்னர்களை வைத்து தாக்குவதற்காக வேண்டுமென்றே ஒருபுறத்தில் காய்ந்த தன்மையுடன் பிட்ச் உருவாக்கப்பட்டுள்ளதாக ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட ஆஸ்திரேலியர்கள் மீண்டும் விமர்சித்தனர்.

Steve Smith Harsha Bhogle

ஆனால் முதல் போட்டியில் 177, 91 என 2 இன்னிங்சிலும் சொதப்பலாக செயல்பட்டு ஆஸ்திரேலியா சுருண்ட அதே பிட்ச்சில் 400 ரன்கள் அடித்து இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா ஆஸ்திரேலியர்களின் அத்தனை குற்றச்சாட்டுகளையும் பொய்யாக்கியது. இந்நிலையில் 2வது போட்டிக்கு தயாராவதற்காக தோல்வியை சந்தித்த அதே நாக்பூர் பிட்ச்சில் ஒருநாள் பயிற்சி எடுப்பதற்கு ஆஸ்திரேலியா அவகாசம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் அதை மறுத்த நாக்பூர் மைதான பராமரிப்பாளர்கள் போட்டி முடிந்தவுடன் பிட்ச்சில் தண்ணீர் அடித்து தங்களை பயிற்சி எடுக்க விடாமல் தடுத்து விட்டதாக ஆஸ்திரேலியா புதிய குற்றச்சாட்டை வைத்துள்ளது.

- Advertisement -

இருப்பினும் பொதுவாக ஒரு போட்டி முடிந்த பின் அடுத்த போட்டிக்கு மைதானத்தை தயார்படுத்துவதற்காக அந்த பிட்ச்சை மைதான பராமரிப்பாளர்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள். சொல்லப்போனால் ஒரு போட்டி முடிந்த பின் அந்த பிட்ச்சில் மேற்கொண்டு பயிற்சி உட்பட வேறு எதுவும் செய்யக்கூடாது என்பதும் ஒரு அடிப்படை விதிமுறையாகும். எடுத்துக்காட்டாக ஒரே மைதானத்தில் அடுத்தடுத்த நாட்களில் போட்டி நடைபெற்றால் கூட முதல் நாளில் பயன்படுத்தப்படும் பிட்ச் அடுத்த நாள் பயன்படுத்தப்பட மாட்டாது.

Shane Warne Ian Healy

மாறாக அருகில் இருக்கும் பிட்ச் தான் பயன்படுத்தப்படும். அதற்காகவே ஒரு மைதானத்தில் எப்போதும் 4 – 5 பிட்ச்கள் இருக்கும். இப்படி அனைத்தையும் தெரிந்தும் குற்றச்சாட்டு வைக்கும் ஆஸ்திரேலியர்களுக்கு மத்தியில் இந்த விஷயத்தில் ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் இயன் ஹீலி மீண்டும் விமர்சித்துள்ளது இந்திய ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது. இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: இந்திய பவுலர்களில் நான் விளையாட கஷ்டப்பட்டது இவருக்கு எதிரா தான் – தினேஷ் கார்த்திக் வெளிப்படை

“இது ஒரு பரிதாபகரமான முயற்சி என்று நான் நினைக்கிறேன். இது மிகவும் சங்கடமானது. அவர்களது முடிவு நாக்பூர் பிட்ச்சில் சில பயிற்சி அமர்வுகளை பெறுவதற்கான எங்களது திட்டங்களை தகர்த்து விட்டது. இது கிரிக்கெட்டுக்கு எந்த வகையிலும் நல்லதல்ல. இதில் ஐசிசி தலையிட்டு இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் நம்பும் வகையில் நடந்து கொள்ள வேண்டுமென கூற வேண்டும். குறிப்பாக வெளிநாட்டு அணிகள் கேட்கும் பயிற்சி சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று இந்தியாவிடம் சொல்ல வேண்டும். ஏனெனில் அவர்களிடம் நாங்கள் பயிற்சி எடுப்பதற்காக கேட்டிருந்தோம். ஆனால் அவர்கள் அதில் தண்ணீரை அடித்து விட்டார்கள். இதில் முன்னேற்றம் வேண்டும்” என்று கூறினார்.

Advertisement