ஸ்மித்தும் வேணாம். கம்மின்சும் வேணாம். ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக அவரை போடுங்க – இயான் ஹீலி

Ian-Healy
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரண்டு போட்டியிலும் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா அணியானது இந்த 4 போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் பின் தங்கியுள்ளது.

IND vs AUS

- Advertisement -

இந்நிலையில் அடுத்த மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அந்த அணியில் இருந்து பல்வேறு வீரர்கள் காயம் காரணமாக வெளியேறி உள்ளனர். அதே போன்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தனது தாயின் உடல்நிலை காரணமாக 3 ஆவது போட்டியில் இருந்து விலகி நாடு திரும்பியுள்ளார்.

இதன் காரணமாக 3 ஆவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான இயான் ஹீலி அடுத்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் குறித்து தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.

Travis Head 101

அதன்படி அவர் கூறுகையில் : பேட் கம்மின்ஸ் பந்துவீச்சாளராக மட்டுமே இருக்கலாம். அவருக்கு கேப்டன் பதவி தேவையில்லை, அவரது கரியர் முடியும்போது அவர் ஒரு சிறந்த பந்துவீச்சாளராக இருக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

இதையும் படிங்க : 3 நாள்ல ஏன் டெஸ்ட் மேட்ச்ச முடிக்கிறீங்க ரொம்ப கடுப்பாகுது – ரசிகரின் கேள்விக்கு அஷ்வின் கொடுத்த பதில் இதோ

ஆஸ்திரேலிய அணிக்கு அடுத்த கேப்டனாக கிளென் மேக்ஸ்வெல் அல்லது டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரில் ஒருவரை நியமிக்கலாம். ஏனெனில் டிராவிஸ் ஹெட் தனது 21-வது வயதிலிருந்து கேப்டன்சி செய்து வருகிறார். எனவே அவர் கேப்டனாக செயல்படுவது ஒரு நல்ல முடிவாக கருதுகிறேன் என்று இயான் ஹீலி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement