ஐ.பி.எல் ஆணிகளால் சர்வதேச கிரிக்கெட்டிற்கு கண்டிப்பா ஆபத்து வரும் – இயான் சேப்பல் எச்சரிக்கை

Chappell
- Advertisement -

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது 16 சீசன்களை வெற்றிபெறமாக நிறைவு செய்துள்ள வேளையில் 17-வது சீசனுக்கான வேலைகளை ஆரம்பித்து விட்டது. இந்நிலையில் ஐபிஎல் அணிகளால் உலக கிரிக்கெட்க்கு ஆபத்து வரும் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான இயான் சாப்பல் அனைத்து கிரிக்கெட் வாரியங்களையும் எச்சரித்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஐபிஎல் பலராலும் பார்க்கப்படும் தொடராக இருக்கிறது. இந்தியாவில் கிரிக்கெட் பிரபலமாக இருப்பதால் வெளிநாடுகளில் நடக்கும் தொடர்களில் கூட ஐபிஎல் அணிகளைச் சேர்ந்த நிர்வாகங்கள் தங்களுக்கு என ஒரு அணியை வாங்கி வெளிநாட்டு தொடர்களிலும் தற்போது பங்கேற்று வருகின்றன.

- Advertisement -

அந்த வகையில் வெளிநாடுகளில் நடக்கும் ஐபிஎல் அணிகள் மற்றொரு அணியை வாங்குவதால் சர்வதேச கிரிக்கெட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என்று இயான் சேப்பல் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

தற்போதைய கிரிக்கெட்டை பொருத்தவரை ஐபிஎல் தொடரானது உலகில் உள்ள அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஐ.பி.எல் அணிகள் மற்ற நாடுகளில் நடைபெறும் டி20 அணிகளை வாங்கினால் இனி சர்வதேச போட்டிகள் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

ஏனெனில் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு காலகட்டத்தில் டி20 லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. அப்படி நடைபெறும் போட்டிகளுக்கான அட்டவணையை வகுத்துக் கொடுக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டை விளையாடுவதற்கு இடமின்றி போகும். அதோடு சர்வதேச போட்டிகளில் எண்ணிக்கையும் குறையும்.

இதையும் படிங்க : ஈட்டி எறிந்த பின் அப்படி செய்வதற்கு எம்எஸ் தோனி தான் காரணம்.. ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா பேட்டி

எனவே ஐபிஎல் அணிகள் மற்ற நாடுகளில் நடைபெறும் டி20 தொடர்களுக்கான அணிகளை வாங்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும். சர்வதேச கிரிக்கெட் நீண்டு நிலைக்க வேண்டும் எனில் நிச்சயம் இந்த விதிகளை மாற்றியாக வேண்டும் என்று இயான் சேப்பல் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement