ஈட்டி எறிந்த பின் அப்படி செய்வதற்கு எம்எஸ் தோனி தான் காரணம்.. ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா பேட்டி

Neeraj Chopra
- Advertisement -

பாரிஸ் நகரில் ஒலிம்பிக் 2024 போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. அதில் தங்கம் வெல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தாலும் இந்தியா 1 வெள்ளி 5 வெண்கல பதக்கங்களை வென்று அசத்தியது. அந்த ஒரு வெள்ளிப் பதக்கத்தை ஈட்டி எறிதலில் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் நீரஜ் சோப்ரா வென்று நாட்டுக்கு மீண்டும் பெருமை சேர்த்தார்.

கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் ஈட்டி எறிதலில் அவர் தங்கப்பதக்கம் வென்றார். அதனால் ஈட்டி எறிதல் விளையாட்டில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற மாபெரும் சரித்திரத்தையும் அவர் படைத்தார். அதே போல இம்முறையும் அவர் தங்கப்பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் லேசான காயத்தால் தடுமாறிய அவர் அதையும் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

- Advertisement -

தோனி மாதிரி:
முன்னதாக நீரஜ் சோப்ரா வேகமாக ஓடி வந்து ஈட்டியை எறிந்து விட்டு அது சென்று தரையில் படுவதற்கு முன்பாகவே ஆக்ரோஷமாக கொண்டாடுவார். குறிப்பாக ஈட்டி பறந்து சென்று இலக்கை தொடுவதற்கு முன்பாகவே அவர் தன்னுடைய கையை உயர்த்தி கொண்டாடுவார். அதற்கான காரணம் என்ன என்று சமீபத்திய பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தான் காரணம் என்று நீரஜ் சோப்ரா பதிலளித்தார். இது பற்றி அவர் சொன்னது பின்வருமாறு. “இதற்கு தோனிக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் ஒரு போட்டியின் போது தோனி பந்தை சிக்ஸர் அடித்து விட்டு அதை பார்க்கவே மாட்டார். காரணம் கண்டிப்பாக அந்த பந்து சிக்ஸர் செல்லும் என்பது அவருக்குத் தெரியும்”

- Advertisement -

“அதைப் பார்த்து தான் ஈட்டி ஏறிதலின் போது நானும் செய்கிறேன். வேகமாக ஓடி வந்து வீசும் எனக்கும் வெற்றி பெறுவேன் என்பது தெரியும்” என்று கூறினார். இங்கே நீராஜ் சோப்ரா கூறும் போட்டி கடந்த 2009ஆம் நியூசிலாந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியாகும். அப்போட்டியில் சச்சின் சதமடித்த பின் கடைசிக்கட்ட ஓவர்களில் தோனி களமிறங்குவார்.

இதையும் படிங்க: 29/2 டூ 156/3.. 113மீ மெகா சிக்ஸர்.. ஹண்ட்ரட் தொடரில் 2 போர்ஸ் 8 சிக்ஸ் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் பொளந்து கட்டிய பூரான்

அப்போது நியூசிலாந்து பவுலர் வீசிய 44வது ஓவரின் கடைசி பந்தில் தோனி முரட்டுத்தனமான சிக்சரை அடிப்பார். ஆனால் தாம் அடித்த பவருக்கு கண்டிப்பாக அந்த பந்து சிக்ஸர் செல்லும் என்று உணர்வுடன் தோனி அதை நிமிர்ந்தே பார்க்க மாட்டார். அதே போலவே பந்து சிக்ஸராக சென்று ரசிகர்கள் கூட்டத்திற்குள் விழும். அந்த வகையில் தோனி போல தாம் வீசும் ஈட்டி வெற்றி தூரத்தை தொடும் என்ற நம்பிக்கையுடன் அதை பார்க்காமலேயே கொண்டாடுவேன் என்று நீரஜ் சோப்ரா தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement