இந்திய அணியின் வீரரான இவர் சாதாரணமான ஆள் கிடையாது – ஆஸி வீரர்களை எச்சரித்த இயான் சேப்பல் – விவரம் இதோ

Chappell
- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணியும், டி20 தொடரில் இந்திய அணியும் தொடரை கைப்பற்றியது. மீதமுள்ள 4 டெஸ்ட் போட்டிகளில் முதல் போட்டி வருகின்ற 17ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது முதல் டெஸ்ட் போட்டியுடன் நாடு திரும்புவதாக கூறியுள்ளார். மனைவியின் கர்ப்பகாலத்தில் அவருடன் இருப்பதற்கு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார் விராட்.

INDvsAUS

- Advertisement -

தனால் மீதமுள்ள மூன்று டெஸ்ட் போட்டிக்கு யார் கேப்டனாக இருக்க வேண்டுமென்று பலர் தங்களது கருத்துக்களை தெரிவிக்கின்றனர். அந்த வரிசையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் டெஸ்ட் போட்டிகளில் ரஹானேவின் கேப்டன்ஷிப் மிகவும் அற்புதமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் : “நான் ரஹானேவின் கேப்டன்ஷிப்பை நேரில் பார்த்த அனுபவத்தில் தான் கூறுகிறேன்.

2017 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது விராட் கோலிக்கு காயம் ஏற்பட்டு டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை. இதனால் மீதமிருந்த டெஸ்ட் போட்டிகளுக்கு ரஹானே கேப்டனாக பொறுப்பேற்றார். அப்போது ஒரு போட்டியில் டேவிட் வார்னரின் விக்கெட்டை வீழ்த்த இந்திய அணி போராடியது. சிறப்பாக செயல்பட்ட ரஹானே குல்தீப் யாதவ்வை பயன்படுத்தி வார்னரின் விக்கெட்டை சுலபமாக வீழ்த்தினார்.

Rahane

அந்த போட்டியில் இந்திய அணி விரைவில் விக்கெட்களை இழந்தது. அந்த இக்கட்டான சூழ்நிலையில் ரஹானே 27 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அணிக்கு பலம் சேர்த்தார். கேப்டன்ஷிப்பில் ஆக்ரோஷம் மற்றும் பழமைவாதம் என இரண்டு வகை உண்டு. அதில் ரகானே ஆக்ரோஷமாக விளையாடக் கூடியவர். ஆகையால் ஆஸ்திரேலிய அணி இதை கருத்தில் கொண்டு எதிர்கொள்ள வேண்டும்.

Rahane

விராட் கோலி இல்லை என்றாலும் அந்தக் குறையை ரஹானே முழுமையாக நிவர்த்தி செய்வார் என்று தெரிவித்துள்ளார் இயான் சேப்பல். தற்போது இந்தியா ஏ அணி மற்றும் ஆஸ்திரேலிய ஏ ஆகிய இரு அணிகளுக்கு இடையேயான 3 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டி நடைபெற்றுவருகிறது. இந்த பயிற்சி போட்டியில் இந்திய அணிக்கு ரஹானே கேப்டனாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்ததக்கது.

Advertisement