இவர்கள் இருவரையும் துவக்கத்தில் வீழ்த்தினால் தான் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த முடியும் – இயான் சேப்பல் பேட்டி

Chappell
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான இயான் சேப்பல் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் டெஸ்ட் தொடரை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்.

- Advertisement -

இந்த தொடரில் விறுவிறுப்பிற்கும், சுவாரஸ்யதிற்கும் பஞ்சம் இருக்காது என்று நினைக்கிறேன். கடந்த முறை இந்திய அணி தொடரை வென்றதால் நம்பிக்கையுடன் வருவார்கள். ஆனால் தற்போது அணியில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் அணிக்கு திரும்பி இருப்பதால் இந்த முறை இந்தியாவுக்கு வெற்றி கொஞ்சம் கடினமாகவே இருக்கும்.

இவர்கள் இருவரையும் சீக்கிரம் வீழ்த்தினால் தான் இந்திய அணி வெற்றி பெறலாம் இல்லாவிடில் ஆஸ்திரேலியாவை வெற்றி பெறும். மூன்று வடிவ போட்டியிலும் இந்திய அணியின் கேப்டன் கோலி சிறப்பாக ரன் குவித்து வருகிறார். என்னை பொறுத்தவரை தற்போது உலகின் சிறந்த பேட்ஸ்மென் என்றால் அது கோலி தான் என்று இயான் சேப்பல் தெரிவித்தார்.

Aus

கடந்த முறை ஆஸ்திரேலிய சென்றிருந்தபோது ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்களான வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் பந்தைச் சேதப்படுத்தியதாக காரணமாக ஓராண்டு தடையில் இருந்ததால் அந்த தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக அவர்களால் விளையாட முடியவில்லை. இதனால் இந்திய அணி எளிதில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது என்று பலரும் கூறினர்.

- Advertisement -

ஆனால் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு கூட்டணி தற்போது முன்பு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பாக உள்ளதாலேயே எதிரணிகளை வீழ்த்துகிறது என்பதே உண்மை அந்த அளவிற்கு இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சு தொடர்ச்சியாக இருக்கிறது. இதனால் இம்முறை அவர்கள் இருவரும் அணியில் இணைந்துள்ளதால் கடும் போட்டி நிலவும் என்பது மட்டும் நிச்சயம்.

smith

இருப்பினும் தற்போது உள்ள இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரு பிரிவிலும் சிறப்பாக இருப்பதால் இம்முறையும் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் சாதிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement