ஸ்பின் பவுலிங்கிற்கு எதிராக இந்திய அணியின் வீரரான இவரே பெஸ்ட் – இயான் சேப்பல் கருத்து

Chappell
- Advertisement -

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கிரிக்கெட் உலகம் தற்போது ஸ்தம்பித்துள்ளது. கிரிக்கெட் விளையாடும் பல்வேறு நாடுகளின் வீரர்களும் தற்போது தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு அவரது வீட்டில் நேரத்தை கழித்து வருகின்றனர். மேலும் இந்த ஓய்வு நேரத்தை பயன்படுத்தி பிரபலங்கள் பலரும் தங்களது கிரிக்கெட் குறித்த அனுபவங்களையும், தங்களது கருத்துக்களையும் இணையத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.

Ind-lose

- Advertisement -

அந்தவகையில் ஏகப்பட்ட செய்திகள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான இயான் சேப்பல் தற்போது கிரிக் இன்போ இணையதளத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் : ஸ்பின் பவுலிங் சிறப்பாக பேட்டிங் செய்யும் வீரர் யார் என்று தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

அதில் இதுவரை இந்திய அணியின் டெஸ்ட் அணியின் முன்னணி வீரரான வி வி எஸ் லட்சுமணன் ஸ்பின் பவுலிங்கிற்கு எதிராக உலகின் தலைசிறந்த வீரர் என வர்ணித்துள்ளார். ஏனெனில் அவர் வேகப்பந்து வீச்சில் சோடைபோகக் கூடியவர் அல்ல என்று கூறிய இயான் சேப்பல் 2000ஆம் ஆண்டு சிட்னியில் தொடக்க வீரராக களமிறங்கி 174 ரன்கள் விளாசிய போது சக்திவாய்ந்த ஹூக் ஷார், புல் ஷாட் என அப்போது இருந்த மிகப் பெரிய பந்து வீச்சாளர்களுக்கு எதிர் எதிரே தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

Laxman

அதேபோல ஸ்பின் பவுலிங்கை ஆடும் விதத்தில் விவிஎஸ் லக்ஷ்மன் 2001ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த டெஸ்ட் போட்டியின்போது 281 ரன்களை குவித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு புதிய கிரிக்கெட் வரலாற்றை புரட்டிப்போட்ட போட்டியில் முக்கிய வீரராக திகழ்ந்தார். கொல்கத்தாவில் நடந்த அந்த போட்டியில் அவர் அடித்த ரன்கள் நான் பார்த்ததிலேயே ஸ்பின் பவுலிங் சிறப்பான டாப் கிளாஸ் ஆட்டம் என்று நான் கூறுவேன்.

- Advertisement -

அந்த தொடர் முடிந்த பிறகு லட்சுமணனுக்கு பவுலிங் செயத அனுபவம் பற்றியும் அவரிடம் கேட்டதற்கு : ஷேன் வார்ன் நான் மோசமாக வீசவில்லை என்றார். நானும் ஆமாம் என்றேன் மூன்று அடி மேலே ஏறி வந்து என்னால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு ஷாட் ஒன்றை ஆடினார். ஆனால் அடுத்த பந்தை பின்னால் சென்று கட் செய்கிறார். அது மோசமான பந்து அல்ல மாறாக அவரது உத்தி சிறப்பாக அமைந்தது என்று ஷேன் வார்ன் கூறினார்.

அந்த இன்னிங்சில் 452 பந்துகளை எதிர்கொண்ட லட்சுமணன் சென்னை போட்டியில் முழுக்க முழுக்க எதிர்கொண்டு சிறப்பாக ஆடினார். அந்த இன்னிங்ஸ்க்கு பிறகு இந்திய அணி எந்த சூழ்நிலையில் இருந்தாலும் லக்ஷ்மணன் அதை சிறப்பாக பார்த்துக் கொள்ளும் அளவிற்கு திறன் வாய்ந்த வீரராக உருமாறினார். மேலும் அப்போது உள்ள இந்த சிறப்பான பந்து வீச்சுக்கு எதிராக அவர் ஆடிய ஆட்டம் இன்று வரை சிறப்பான ஆட்டமாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement