டி20 உலகக்கோப்பை : செமி பைனலுக்கு போகும் 4 அணிகள் இதுதான் – இயான் சேப்பல் கணிப்பு

Chappell
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த 22ஆம் தேதி உடன் முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது சூப்பர் 12-சுற்று போட்டிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளில் முன்னணி அணிகள் தோல்வியை சந்தித்து வரும் வேளையில் சில அணிகள் எதிர்பாராத வெற்றிகளை குவித்து வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான் அணி முதல் 2 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.

Shaheen-afridi

- Advertisement -

2 குழுக்களாக பிரிக்கப்பட்டு 12 அணிகள் இந்த சூப்பர் 12 சுற்றில் மோதுகின்றன. அதில் குரூப் ஒன்றில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள் மோதுகின்றன. அதேபோன்று குரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், நமீபியா, ஸ்காட்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன.

இதில் குரூப் 2-ல் தற்போது பாகிஸ்தான் அணி இரண்டு வெற்றிகளை பதிவு செய்து அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேற கடுமையான போட்டியை அளிக்கும். அதே போன்று குரூப்-1 தென்ஆப்பிரிக்க அணியும் இங்கிலாந்து அணியும் அரையிறுதிக்கு முன்னேற கடுமையான போட்டி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

rsa

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான இயான் சேப்பல் இந்த உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னேறும் நான்கு அணிகள் குறித்த தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : குரூப் 12 சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் குரூப் 1-ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு பிரகாசமான வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 கிரிக்கெட்டில் உலகின் பெஸ்ட் பவுலர்ன்னா அது இந்திய வீரரான இவர்தான் – முகமது ஆமீர் புகழாரம்

அதேபோன்று குரூப் 2-ல் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு இருப்பதாகவும் தான் கருதுவதாக குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ள நிலையில் இந்திய அணி இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். அதே போன்று இங்கிலாந்து ஏற்கனவே ஒரு வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement