2022 டி20 உ.கோ பாகிஸ்தான் மேட்ச் இல்ல, அது தான் விராட் கோலி கேரியரின் மாஸ்டர் பீஸ் இன்னிங்ஸ் – இயன் சேப்பல் பாராட்டு

Ian Chappell
- Advertisement -

நட்சத்திர இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த 2008 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக வென்று சர்வதேச அரங்கில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே இடத்தை பிடித்தார். குறிப்பாக ஜாம்பவான் சச்சின் ஓய்வு பெற்ற 2013க்குப்பின் 3 வகையான கிரிக்கெட்டிலும் உலகின் டாப் பவுலர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு வரும் அவர் 25000க்கும் மேற்பட்ட ரன்களையும் 75 சதங்களையும் அடித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்து நவீன கிரிக்கெட்டின் நாயகனாக சொல்லிட்டு வருகிறார்.

அப்படி கடந்த 15 வருடங்களில் அவர் விளையாடிய நிறைய இன்னிங்ஸ்களில் 2022 டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆரம்பத்திலேயே தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை 82* ரன்கள் குவித்து வெற்றி பெற வைத்தது மிகவும் மகத்தான இன்னிங்ஸாக போற்றப்படுகிறது. சொல்லப்போனால் அதுவே தம்முடைய கேரியர் மிகச் சிறந்த இன்னிங்ஸ் என்று விராட் கோலியே தெரிவித்துள்ளார். அது போக 2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் ஹோபார்ட் நகரில் வாழ்வா – சாவா போட்டியில் இலங்கையை புரட்டி எடுத்தது, 2012 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக 183 ரன்கள் அடித்தது போன்றவை விராட் கோலியின் மகத்தான இன்னிங்ஸ்களாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

மாஸ்டர் பீஸ்:
இந்நிலையில் எத்தனை மகத்தான இன்னிங்ஸ் விளையாடியிருந்தாலும் 2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்ட் மைதானத்தில் இந்தியாவை முதல் முறையாக கேப்டனாக விராட் கோலி தலைமை தாங்கிய டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸிலும் சதமடித்தே மிகவும் சிறந்தது என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் இயன் சேப்பல் பாராட்டியுள்ளார். அதிலும் 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவுக்கு பயத்தை காட்டி இந்தியாவை வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்த 141 ரன்கள் மாஸ்டர் பீஸ் என்று பாராட்டும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“2012இல் மகத்தான சச்சின் விளையாடிக் கொண்டிருந்த போது வாக்காவில் நடைபெற்ற போட்டியில் 44, 75 ரன்கள் குவித்து விராட் கோலி தம்முடைய ஆரம்பத்தை காட்டினார். குறிப்பாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சுக்கு எதிராக தன்னுடைய திறமையின் குழுவை காட்டிய அவர் அடிலெய்டில் மற்ற வீரர்கள் சொதப்பிய போது சிறப்பான சதமடித்தார். அதுவே அவர் இந்தியாவின் மகத்தான அடுத்த பேட்ஸ்மேன் என்பதை ஒப்புக்கொள்ள வைத்தது”

- Advertisement -

“அதன் பின் சுமார் 2 வருடங்கள் கழித்து மீண்டும் அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் இந்தியாவின் கேப்டனாக நியமிக்கப்பட்ட போட்டியில் 2 சதங்கள் அடித்த அவர் கிட்டத்தட்ட மறக்க வெற்றியின் அருகில் அழைத்து வந்தார். குறிப்பாக சுழலுக்கு சாதகமாக மாறிய பிட்ச்சில் 2வது இன்னிங்ஸில் அடித்த 141 ரன்கள் மாஸ்டர் பீஸ் ஆகும். அந்த இன்னிங்ஸ் விராட் கோலியின் அற்புதமான தலைமை பண்பு மற்றும் சந்தேகமமற்ற திறமையை காட்டியது”

இதையும் படிங்க:2019 இருந்த ரோஹித்தா நான் மாறப்போறேன். அடுத்த 2 மாசம் என்னோட டார்கெட் இதுதான் – ரோஹித் சர்மா எடுத்துள்ள அதிரடி முடிவு

“குறிப்பாக 16 பவுண்டரி 1 சிக்ஸர் உட்பட 100 பந்துகளில் 80 ரன்கள் என்ற விகிதத்தில் பேட்டிங் செய்த அவர் நேதன் லைன் சுழலை அற்புதமாக எதிர்கொண்டார். அதிலும் சவாலான பிட்ச்சில் அவர் அடித்த கவர் ட்ரைவ் ஆஸ்திரேலியர்களை வெற்றிக்காக கடுப்பாக வைத்தது. அந்த வகையில் கேப்டனாகவும் வீரராகவும் அவர் நிறைய சாதனைகள் படைத்திருந்தாலும் அப்போட்டியின் 2வது இன்னிங்ஸில் அபாரமானது” என்று கூறினார்.

Advertisement