அவர வெச்சுகிட்டே அவரோட தப்ப சரி பண்ணிட்டீங்க ரோஹித், நீங்க கிரேட் டெஸ்ட் பேட்ஸ்மேன் தான் – இயன் சேப்பல் பாராட்டு

Ian Chappell Rohit Sharma
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் குறைந்தபட்சம் 3 போட்டிகளை வென்று 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் லட்சியத்துடன் இந்தியா விளையாடி வருகிறது. பிப்ரவரி 9ஆம் தேதி நாக்பூரில் துவங்கிய இத்தொடரின் முதல் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தாலும் இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 177 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக மார்னஸ் லபுஸ்ஷேன் 49 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 37 ரன்களும் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்களும் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்களும் எடுத்தனர்.

IND vs AUS Rohit

- Advertisement -

அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு சுழலுக்கு சாதகமான மைதானத்தில் நிதானம் வேலைக்காகாது என்று கருதிய கேப்டன் ரோகித் சர்மா ஆரம்பத்திலேயே அதிரடியாக செயல்பட்டு விரைவாக அரை சதம் கடந்தார். ஆனால் அவருடன் பெயருக்காக 76 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ராகுல் 20 ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்து வந்து பேட்மேன்களில் அஸ்வின் 23 ரன்கள் எடுத்ததை தவிர்த்து புஜாரா 7, விராட் கோலி 12, சூரியகுமார் யாதவ் 8, கேஎஸ் பரத் 8 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

கிரேட் ரோகித்:
அதனால் ஆரம்பத்தில் அதிரடி காட்டிய ரோகித் சர்மா அதன்பின் பொறுப்புடன் செயல்பட்டு 15 பவுண்டரி 2 சிக்ஸருடன் சதமடித்து 120 (212) ரன்களை 56.60 என்ற தரமான ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து இந்தியாவை முன்னிலைப்படுத்தி அவுட்டானார். முன்னதாக 2013இல் அறிமுகமானாலும் ஆரம்பத்தில் ரொம்பவே தடுமாறிய அவர் சிறந்த வெள்ளை பந்து பேட்ஸ்மேன் என்ற முத்திரையும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார் என்ற விமர்சனங்களையும் சந்தித்தார். ஆனால் 2019 உலகக்கோப்பையில் 5 சதங்களை அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை பெற்ற அவர் அதிலிருந்து சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்.

Rohit Sharma

குறிப்பாக 2021இல் வேகத்துக்கு சாதகமான லண்டன் ஓவல் டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் சதமடித்து தன் மீதான விமர்சனங்களை நொறுக்கிய அவர் தற்போது சுழலுக்கு சாதகமான நாக்பூர் மைதானத்தில் ஸ்டீவ் ஸ்மித் போன்ற தரமான வீரர்கள் தடுமாறிய போது அசத்தல் சதமடித்துள்ளார். அந்த வகையில் தன்னை மிகச் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என்பதை ரோகித் சர்மா நிரூபித்துள்ளதாக தெரிவிக்கும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் இயன் சேப்பல் விராட் கோலி அவுட்டான பின் பொறுப்புடன் மெதுவாக விளையாடி இந்தியாவை முன்னிலைப்படுத்தியது அபாரமாக இருந்ததாக பாராட்டியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு சவால் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி சொற்ப ரன்களில் அவுட்டாகி செய்த தவறை சரி செய்யும் வகையில் பொறுப்புடன் சதமடித்து சிறந்த கேப்டனாகவும் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாகவும் ரோகித் சர்மா தன்னை நிரூபித்துள்ளதாக அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

Chappell

“விராட் கோலிக்கு முன்பாக பேட்டிங் செய்தது ரோகித் சர்மாவிடம் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் விராட் கோலி அவுட்டானது அவருக்கு சில பிரச்சினைகளை ஏற்படுத்தியது என்று நினைக்கிறேன். ஆனால் என்ன நடந்தாலும் கேப்டனாக பொறுப்பை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அவர் விளையாடியது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில் அவர் மிகச் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக மாறியுள்ளார்”

இதையும் படிங்க: IND vs AUS : வாயில் பேசாமல் செயலில் பேசி வெறும் 2 மணி நேரத்தில் உலகின் நம்பர் ஒன் அணியை சுருட்டி வீசிய இந்தியா – வென்றது எப்படி

“இது ரோகித் சர்மாவின் மிக மிகச் சிறந்த இன்னிங்ஸ் ஆகும். அவர் இதர இந்திய வீரர்களுக்கு இந்த மைதானத்தில் எப்படி விளையாட வேண்டும் என்ற பாடத்தையும் எடுத்து காட்டியுள்ளார். இன்று அவர் மிகவும் நிதானமாக விளையாடினார். இது தான் அவருடைய உண்மையான சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ் ஆகும்” என்று கூறினார். அவரது சிறப்பான ஆட்டத்தால் 2வது இன்னிங்ஸிலும் பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா ஆஸ்திரேலியாவை வெறும் 91 ரன்களுக்கு சுருட்டி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 1 – 0* (4) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

Advertisement