- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விராட் கோலிக்காக.. அந்த தரமான பிளேயரை கழற்றி விட்டு இந்தியா வேஸ்ட் பண்ணிடக் கூடாது.. இயன் பிஷப்

வெஸ்ட் இண்டீஸ் அமெரிக்காவில் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை நடைபெற்று வருகிறது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் ஜூன் 5ஆம் தேதி அயர்லாந்தை சந்திக்கிறது. அந்தப் போட்டியில் இந்தியாவுக்காக கேப்டன் ரோகித் சர்மாவுடன் மற்றொரு துவக்க வீரராக களமிறங்கப் போவது யார் என்ற குழப்பம் ரசிகர்களிடையே காணப்படுகிறது.

ஏனெனில் ஐபிஎல் 2024 தொடரில் பெங்களூரு அணிக்காக ஓப்பனிங்கில் 741 ரன்கள் அடித்த விராட் கோலி ஆரஞ்சு தொப்பியை வென்று நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனவே அவரை ரோஹித் சர்மாவுடன் ஓப்பனிங்கில் களமிறக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர், சௌரவ் கங்குலி போன்ற ஜாம்பவான்கள் கேட்டுக்கொண்டனர். அதனால் விராட் கோலி ஓப்பனிங்கில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

- Advertisement -

பிஷப் கருத்து:
இந்நிலையில் விராட் கோலிக்காக தரமான ஜெய்ஸ்வாலை பயன்படுத்தாமல் ராகுல் டிராவிட் வீணடித்து விடக்கூடாது என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் இயன் பிஷப் கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி டாப் ஆர்டரில் விளையாடுவதை நான் விரும்புகிறேன். கடந்த சில வருடங்களாகவே நான் இதை சொல்லியும் வருகிறேன். ஆனால் இந்தியா மற்றும் ராகுல் டிராவிட் வேறு வாய்ப்புகளை பற்றி நினைக்கலாம்”

“ஜெய்ஸ்வால் பற்றி பார்க்கும் போது அவருடைய ஐபிஎல் ஃபார்ம் கொஞ்சம் கவலை கொடுக்கிறது. இருப்பினும் அந்த ஃபார்ம் ஓரளவு நன்றாக இருப்பதாக நீங்கள் கருதினால் அவர் டாப் ஆர்டரில் விளையாடுவதை நான் விரும்புவேன். ஏனெனில் அவர் இடது கை பேட்ஸ்மேன். அவரால் உங்களுக்கு இடது – வலது கை ஓப்பனிங் ஜோடி கிடைக்கும். சூரியகுமார் யாதவ் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை”

- Advertisement -

“ரிஷப் பண்ட் மீண்டும் வந்துள்ளதை பார்ப்பது நன்றாக இருக்கிறது. அவர் உங்களுடைய அணியில் மற்றொரு இடது கை வீரர் தேர்வை கொடுக்கிறார். அதனாலேயே ஜெய்ஸ்வால் பிளேயிங் லெவனில் இருப்பது அவசியம் என்று நான் நினைக்கிறேன். நல்ல ஃபார்மில் இருக்கும் போது அவர் உங்களுக்கு தரத்தையும் இடதுகை பேட்ஸ்மேன் சாதகத்தையும் கொடுப்பார்”

இதையும் படிங்க: ஆர்சிபி நண்பன் சிராஜுக்கு இடமில்லை.. 4 ஆல் ரவுண்டர்கள்.. டிகே கணித்த உத்தேச இந்திய ப்ளேயிங் லெவன்

“அதைத் தொடர்ந்து உங்களுக்கு ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நல்ல தேர்வாக இருப்பார்கள்” என்று கூறினார். முன்னதாக 2024 ஐபிஎல் தொடரில் ஜெய்ஸ்வால் ஒரு சதம் மட்டுமே அடித்தார். அதை தவிர்த்து தடுமாற்றமாக விளையாடியதாலேயே விராட் கோலியை ஓப்பனிங்கில் களமிறக்க வேண்டும் என்ற கருத்துக்கள் காணப்படுகிறது. அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -