இந்தியாவின் ஜோப்ரா ஆர்ச்சர், வேகத்தால் மிரட்டுவார் பாருங்க – வெ.இ ஜாம்பவானின் பாராட்டை பெற்ற உம்ரான் மாலிக்

Umran Malik Last Over
- Advertisement -

பல எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமான 3-வது வாரத்தைக் கடந்து விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்காக அனைத்து அணிகளும் மல்லுக்கட்டி வரும் நிலையில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இதுவரை பங்கேற்ற தனது 6 போட்டிகளில் 4 வெற்றிகளை பதிவு செய்து புள்ளி பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அந்த அணியில் பேட்டிங்கை விட வலுவான பந்துவீச்சு கூட்டணி தான் இந்த அடுத்தடுத்த வெற்றிகளுக்கு துருப்புச் சீட்டாக செயல்பட்டு வருகிறது என்றே கூறலாம்.

Natarajan Nattu SRH

- Advertisement -

மிரட்டலான உம்ரான் மாலிக்:
அந்த அணியில் தேவையான நேரத்தில் வேகத்தை குறைத்து மெதுவான பந்துகளை வீசுவதற்கு அனுபவ வீரர் புவனேஷ்வர் குமாரும் போட்டியின் எந்த நேரத்திலும் விக்கெட்டுக்களை எடுக்கும் திறமை பெற்ற தமிழகத்தின் யார்கர் கிங் என அழைக்கப்படும் நடராஜனுடன் கைகோர்த்துள்ள ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் ஐதராபாத் அணியின் பந்து வீச்சை மிரட்டலானதாக காட்சியளிக்க வைக்கிறார். அனுபவமும் இளமையும் கலந்த கலவையாக திகழும் ஹைதராபாத் வேகப்பந்து வீச்சு கூட்டணி இதர ஐபிஎல் அணிகளை காட்டிலும் இந்த வருடம் மிகச் சிறந்த பந்துவீச்சு கூட்டணியாக சாதனை படைத்து வருகிறது.

அதிலும் 22 வயது மட்டுமே நிரம்பிய இளம் வீரர் இம்ரான் மாலிக் தொடர்ச்சியாக 140 கி.மீ க்கும் மேல் பந்துவீசி அனைவரின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். அவரின் குறைந்தபட்ச வேகமே 140 என்ற நிலைமையில் அதிகபட்ச வேகம் 153 ஆக உள்ளது உண்மையாகவே எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்துகிறது.

Umran Malik

குறிப்பாக சென்னைக்கு எதிரான போட்டியில் 153.3 கி.மீ வேகப்பந்தை வீசிய அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிகமான பந்தை வீசிய பவுலர் என்ற வரலாற்றுச் சாதனையையும் இந்த வயதிலேயே படைத்துள்ளார். முதல் ஒருசில போட்டிகளில் வேகத்திற்கு ஈடாக ரன்களை வாரி வழங்கிய அவர் கடந்த சில போட்டிகளாக அதிலும் முன்னேறி விவேகத்துடன் கூடிய வேகத்தைப் பயன்படுத்தி குறைவான ரன்களை மட்டும் கொடுத்து விக்கெட்டுக்களை எடுக்கத் தொடங்கியுள்ளார்.

- Advertisement -

இந்தியாவின் ஜோப்ரா ஆர்ச்சர்:
குறிப்பாக பஞ்சாப்க்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரை அபாரமாக வீசிய அவர் ஒரு ரன் கூட கொடுக்காமல் 3 விக்கெட்டுக்களுடன் மெய்டனாக வீசி ஜாம்பவான் மலிங்காவின் சாதனையை சமன் செய்து ஆட்டநாயகன் விருதை வென்றார். இதனால் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என இப்போதே நிறைய ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

Bishop

அந்த வரிசையில் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த ஜாம்பவான் இயன் பிஷப் மிரட்டலாக செயல்பட்டு வரும் உம்ரான் மாலிக்கை இந்தியாவின் ஜோஃப்ரா ஆர்ச்சர் என பாராட்டியுள்ளார். இதுபற்றி இந்த வருடம் ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த பையன் கடந்த வருடத்திலிருந்தே எனது ஆர்வத்தை தூண்டுகிறார். இதுபோன்ற நல்ல வேகத்தை நீங்கள் சூப்பர் மார்க்கெட்டில் வாங்க முடியாது. நீங்கள் எந்த லைனில் பந்து வீச வேண்டும் என்பதைக்கூட பயிற்சி அளிக்கலாம். ஆனால் எப்படி அதி வேகமாகப் பந்து வீசுவது என்ற பயிற்சியை அளிக்கவே முடியாது. அந்த வகையில் அவரின் அதிரடியான பந்துவீச்சை சிறந்த பேட்ஸ்மேன்கள் கூட எதிர்கொள்ள தடுமாறுவார்கள்”

- Advertisement -

“லாக்கி பெர்குசன், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோரைப் போலவே பயமுறுத்தும் இவரை டேல் ஸ்டைன் மிகவும் விரும்புகிறார். இவர் எந்த அளவுக்கு உயரத்தை தொடுவார் என்பதைப் பார்க்க ஆவலுடன் உள்ளேன். இவர் இதேப்போல் நல்ல உடல் தகுதியுடன் செயல்பட்டால் நிச்சயம் இந்தியாவிற்காக விளையாட முடியும். இந்தியாவில் அவரைப்போல மேலும் இளம் பவுலர்களை பார்க்க விரும்புகிறேன்” என்று கூறினார்.

பொதுவாக மிட்செல் ஸ்டார்க், பட் கமின்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் போன்ற அதிவேகமாக பந்துவீசி எதிரணிகளை அச்சுறுத்தி வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கும் வெளிநாட்டு பவுலர்களை பார்த்து எப்போதும் இந்திய ரசிகர்கள் ஏங்குவார்கள். ஏனெனில் 90% இந்திய பவுலர்கள் தொடர்ச்சியாக 140 கி.மீ வேகப் பந்துகளை வீசுவதற்கு தடுமாறும் காரணத்தால் நமது நாட்டில் இருந்து 150 கி.மீ வேகப்பந்துகளை வீசும் பவுலர் கிடைக்க மாட்டாரா என்ற ஏக்கம் பல வருடங்களாக இருந்து வந்தது.

இதையும் படிங்க : எனது கரியரின் ஆரம்ப கட்டத்தில் கடவுள் மாதிரி சுரேஷ் ரெய்னா உதவினார் – உணர்ச்சியில் நெகிழும் இளம் இந்திய வீரர்

அதற்கு பலனாக கிடைத்துள்ள உம்ரான் மாலிக் நிச்சயமாக வரும் காலங்களில் ஜோப்ரா ஆர்ச்சரை போல எதிரணி பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் இந்திய பவுலராக பெயரெடுக்க உள்ளதை பார்க்க மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதாக இயன் பிஷப் பாராட்டியுள்ளார்.

Advertisement