இவங்க 2 பேர் பேட்டிங் பண்றத பாத்தா அப்படியே சச்சின் விளையாடுற மாதிரியே இருக்கு – இயான் பிஷப் பேட்டி

கிரிக்கெட் வீரர் இயான் பிஷப் வெஸ்ட் இண்டீஸ் நாட்டை சேர்ந்தவர். 1989 ஆம் ஆண்டிலிருந்து 1994 வரை விளையாடியவர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 43 டெஸ்ட் போட்டிகளிலும், 86 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி 289 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இவரது காலகட்டத்தில் பல்வேறு உலக பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசியவர்.

Bishop 2

இந்நிலையில் தற்போது உள்ள பேட்ஸ்மேன்களில் யார் சச்சின் டெண்டுல்கரை போல் ஆடுகிறார்கள் என்பது பற்றி பேசியிருக்கிறார் இயான் பிஷப். இதுகுறித்து அவர் கூறுகையில்…பாபர் அசாம் மற்றும் விராட் கோலி ஆகியோர் எனக்கு சச்சின் டெண்டுல்கரை நினைவுபடுத்துகிறார்கள். சச்சின் டெண்டுல்கர் தான் நான் ஆடிய காலகட்டத்தில் நேர்கோட்டில் விளையாடுவார்.

அவரது அனைத்து ஷாட்களும் நேர்கோட்டில் இருக்கும் .அப்படித்தான் விராட் கோலி மற்றும் பாபர் அசாம் ஆகிய இருவரும் நேர்கோட்டில் எல்லா பந்துகளையும் அடிக்கிறார்கள். இப்படி ஆடும் வீரர்களால் தான் நீண்ட காலத்திற்கு ஜொலிக்க முடியும்.

Azam

இவர்கள் இருவரையும் பேட்டிங் செய்யும்போது பார்க்கையில்எனக்கு சச்சின் டெண்டுல்கர் ஞாபகம் வருகிறது என்று கூறியுள்ளார் இயான் பிஷப். தற்போது விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவன் ஸ்மித் ஆகிய 4 பேர் தான் உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள் என்று பாராட்டப் பட்டு வருகிறார்கள்.

- Advertisement -

அதில் தற்போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமும் இணைந்துள்ளார். மேலும் பாபர் அசாமுக்கு ஆதரவாக கடந்த சில தினங்களுக்கு முன்னாள் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசேன் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.