பைனலில் அவங்கள வெச்சு செய்யணும்னு ஆசையா இருக்கு, இந்தியா – இங்கி போட்டி பற்றி மேத்தியூ ஹெய்டன் பேட்டி

Matthew Hayden
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அனல் பறக்க நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பை உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் 2009க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கிய பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே இந்தியா மற்றும் ஜிம்பாப்வேவிடம் சந்தித்த தோல்வியால் 90% அரையிறுதி வாய்ப்பை நழுவ விட்டது. ஆனால் மனம் தளராமல் அதற்கடுத்த 2 போட்டிகளில் வென்ற அந்த அணி கடைசி நேரத்தில் நெதர்லாந்திடம் தோற்று தென் ஆப்பிரிக்கா வெளியேறிய அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. அந்த நிலையில் நவம்பர் 9ஆம் தேதியன்று நடைபெற்ற முதல் அரை இறுதிப் போட்டியில் வலுவான நியூசிலாந்தை அசால்டாக 7 விக்கெட் வித்யாசத்தில் தோற்கடித்த பாகிஸ்தான் பைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Pak vs NZ Babar Azam Mohammed Rizwan

- Advertisement -

புகழ்பெற்ற சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 152/4 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஃபின் ஆலன் 4, டேவோன் கான்வே 21, கிளன் பிலிப்ஸ் 6 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 46 (42) ரன்களும் டார்ல் மிட்சேல் 55* (35) ரன்களும் எடுத்தனர். அந்தளவுக்கு தரமாக பந்து வீசிய பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சாகின் அப்ரிடி 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

வெச்சு செய்யணும் வாங்க:

அதை தொடர்ந்து 153 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு சமீப காலங்களில் பார்மின்றி விமர்சனங்களை சந்தித்த கேப்டன் பாபர் அசாம் – முகமது ரிஸ்வான் ஜோடி 105 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தது. அதில் பாபர் அசாம் 53 ரன்களும் முகமது ரிஸ்வான் 57 ரன்களும் எடுத்து அவுட்டானாலும் இறுதியில் முகமது ஹாரிஸ் 30 ரன்கள் எடுத்து வெற்றி பெற வைத்தார். இந்த வெற்றியால் 1992 உலக கோப்பையில் இதே ஆஸ்திரேலிய மண்ணில் இம்ரான் கான் தலைமையில் ஆரம்பத்தில் தோல்விகளை சந்தித்தாலும் அதற்காக துவளாமல் கொதித்தெழுந்து கோப்பையை வென்றது போல் இம்முறையும் பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வெல்லும் என அந்நாட்டு ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

VIrat Kohli IND vs PAK

அத்துடன் இதே உலக கோப்பையில் முதல் போட்டியில் வரலாற்றுத் தோல்வியை பரிசளித்த இந்தியாவை பைனலில் சாய்க்க வேண்டும் என்பதற்காகவே 2வது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து தோற்க வேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள். இந்நிலையில் 2வது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்து இந்தியா வெல்ல வேண்டுமென்று விரும்புவதாக பாகிஸ்தான் பேட்டிங் பயிற்சியாளர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார். அதிலும் குறிப்பாக தங்களை முதல் போட்டியில் தோற்கடித்த அதே மெல்போர்ன் மைதானத்தில் அதே ஒரு லட்சம் ரசிகர்களுக்கு முன்னிலையில் இந்தியாவை எதிர்கொண்டு சாய்க்க விரும்புவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி போட்டி முடிந்த பின் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நான் இந்தியாவை எதிர்கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் உலக மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பகுதியினர் அங்கே ஒரே நேரத்தில் ஆதரவு கொடுப்பதற்காக வந்திருப்பார்கள். அது அபாரமானது. அதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா. எனவே தற்போது முதல் ஓரிரு நாட்கள் எங்களது மனதை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்வதுடன் இங்கிலாந்தை இந்தியா தோற்கடித்தால் அது மெல்போர்னில் பைத்தியக்காரத்தனமான குழப்பமாக இருக்கும். ஆனால் இன்றைய வெற்றி மிகவும் ஸ்பெஷலானது” என்று கூறினார்.

Hayden

அதாவது இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு எப்போதுமே அதிகப்படியான எதிர்பார்ப்புகள் இருக்கும் என்ற நிலையில் அவ்விரு அணிகளும் தங்களுடைய நாட்டில் ஒரு லட்சம் ரசிகர்கள் அமரக்கூடிய மெல்போர்ன் மைதானத்தில் அதுவும் ஃபைனலில் மோதுவதை பார்ப்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வை கொடுக்கும் என்று அவர் கூறியுள்ளார். அதே சமயம் அந்த இடத்தில் அதிகப்படியான ரசிகர்களின் ஆதரவை கொண்ட இந்தியாவை தோற்கடித்து கோப்பையை வெல்ல விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். அதனால் 2வது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து தோற்க வேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டே பைனலுக்கு தயாராக இருப்பதாக அவர் பேசியுள்ளார்.

Advertisement