லெஃப்ட் ஹேண்ட் தோனி மாதிரி விளையாடும் அவர்.. நல்லா வருவாரு.. இளம் வீரரை பாராட்டிய அஸ்வின்

Ravichandran Ashwin
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்று முடிந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை 3 – 0 என்ற கணக்கில் ஒய்ட் வாஷ் செய்து வென்றது. அதனால் உலகிலேயே அதிக ஒயிட் வாஷ் டி20 தொடர்களை வென்ற அணி என்ற பாகிஸ்தானின் சாதனையை தகர்த்த இந்தியா புதிய உலக சாதனை படைத்தது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

முன்னதாக 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெற்ற இந்த தொடரில் சிவம் துபே, ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி தங்களுடைய திறமையை காண்பித்தனர். அவர்களை விட இளம் வீரர் ரிங்கு சிங் அழுத்தமான லோயர் மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடி அசத்தினார். குறிப்பாக பெங்களூருவில் நடைபெற்ற கடைசி போட்டியில் 22/4 என தடுமாறிய போது ரோகித்துடன் ஜோடி சேர்ந்த அவர் 190 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியா 212 ரன்கள் குவிக்க உதவினார்.

- Advertisement -

இடது கை தோனி:
அதிலும் குறிப்பாக கடைசி ஓவரில் மட்டும் 3 சிக்ஸர்கள் அடித்து மொத்தம் 69* ரன்கள் விளாசிய அவர் ரசிகர்களை கொண்டாட்டத்தில் வாழ்த்தினார். ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிராக கடைசி ஓவரில் 5 சிக்சர்கள் அடித்து வரலாறு காணாத வெற்றியை கொல்கத்தாவுக்கு பெற்றுக் கொடுத்ததால் இந்தியாவுக்காக அறிமுகமான அவர் இதுவரை தமக்கு கிடைத்த பெரும்பாலான போட்டிகளில் சிறந்த ஃபினிஷராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தோனி இடது கை பேட்ஸ்மேனாக விளையாடினால் எப்படி இருக்குமோ அது போல இந்த இளம் வயதிலேயே ரிங்கு சிங் அசத்துவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அவரை நான் இடது கை தோனி என்றழைப்பேன். இப்போதே அவரை நான் தோனியுடன் ஒப்பிடவில்லை. ஏனெனில் தோனி மிகப்பெரியவர்”

- Advertisement -

“ஆனால் இங்கே நான் ரிங்கு சிங் காட்டும் பொறுமையைப் பற்றி பேசுகிறேன். உத்திரபிரதேச அணிக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் தொடர்ந்து ரன்கள் குவித்த அவர் தற்போது இந்திய அணிக்குள் வந்துள்ளார். கொல்கத்தா அணியில் பல வருடங்களாக இருந்த அவர் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் வலைப்பயிற்சியில் மற்ற பேட்ஸ்மேன்கள் அடிக்கும் பந்துகளை ஓடிப்போய் எடுத்து பவுலர்களிடம் கொடுப்பார் என்று கேள்விப்பட்டுள்ளேன்”

இதையும் படிங்க:மினி யுவராஜ் சிங் மாதிரி ஆடும்.. அவருக்கு 2024 டி20 உ.கோ சான்ஸ் கொடுக்கலாம்.. அஸ்வின் பாராட்டு

“அந்த வகையில் கொல்கத்தா அணியில் நீண்ட காலம் இருந்த அவர் உத்திரபிரதேஷ் அணிக்காக கடினமான உழைப்பை போட்டார். தற்போது இந்திய அணியை கடினமான சூழ்நிலைகளில் வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்து மீட்டெடுக்க முடியும் என்பதை அவர் காண்பிக்கிறார். அணி முதலில் பேட்டிங் செய்தாலும் அல்லது சேசிங் செய்தாலும் அவருடைய அமைதி குலைவதில்லை. குறிப்பாக போட்டியின் கடைசி நேரத்தில் அமைதியாக செயல்படுவது அவருக்கு கிடைத்த போனஸ்” என்று கூறினார்.

Advertisement