IND vs AUS நானா இருந்தா அவருக்காக ரசிகர்களுடன் சண்டை போட்டுருப்பேன், ரோஹித்தின் முடிவு பற்றி – மைக்கேல் கிளார்க்

Micheal Clarke IND vs AUS
- Advertisement -

உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியான ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. முன்னதாக 2019 வாக்கில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிலையான இடத்தை பிடித்த கேஎல் ராகுலை அடுத்த தலைமுறை கேப்டனாக உருவாக்க நினைத்த பிசிசிஐ துணை கேப்டனாக அறிவித்தது. ஆனால் நாளடைவில் அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அதிரடியாக விளையாட வேண்டிய ஓப்பனிங் இடத்தில் தடவலாக செயல்பட்ட அவருடைய பேட்டிங் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

KL Rahul Dravid

- Advertisement -

அதனால் எழுந்த விமர்சனங்களை சமாளிக்க முடியாத பிசிசிஐ ஒருநாள் கிரிக்கெட்டில் அவருடைய ஓப்பனிங் மற்றும் துணை கேப்டன்ஷிப் பதவியை பறித்து விக்கெட் கீப்பராக மட்டும் விளையாடும் வாய்ப்பை கொடுத்தது. அந்த நிலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கடந்த ஒரு வருடமாக அரை சதம் கூட அடிக்காமல் சுமராக செயல்பட்டு வரும் அவருக்கு எதிராக வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்ட நிறைய முன்னாள் வீரர்கள் உச்சகட்ட விமர்சனங்களை எழுப்பினர்.

மைக்கேல் கிளார்க் ஆதரவு:
அதை சமாளிக்க முடியாத பிசிசிஐ கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் அவருடைய துணை கேப்டன்ஷிப் பதவியை பறித்த போதும் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்படும் என்று பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ராகுல் டிராவிட் – ரோஹித் சர்மா ஆகியோர் அறிவித்தனர். அதனால் 3வது போட்டியில் வாய்ப்பு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராகுல் சத்தமின்றி எந்த காரணமும் சொல்லாமல் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நிர்வாகத்தால் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக உச்சகட்ட பார்மில் இருக்கும் இளம் வீரர் சுப்மன் கில் வாய்ப்பு பெற்றது பெரும்பாலானவர்களிடம் வரவேற்பை பெற்றது.

Rohit-and-KL-Rahul

இந்நிலையில் தாம் இந்திய அணியின் கேப்டனாக இருந்தால் கேஎல் ராகுல் போன்ற தரமான வீரருக்காக இந்தியா முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதை காரணமாக வைத்து ரசிகர்கள் மற்றும் விமர்சர்களிடம் சண்டையிட்டு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பேன் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் ரோகித் சர்மா எடுத்த முடிவு தமக்கு ஏமாற்றமளிப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“கேஎல் ராகுலை நான் மிகவும் விரும்புகிறேன். அவர் மிகச்சிறந்த இளம் மற்றும் பரிசாக கிடைத்த வீரர். தற்சமயத்தில் இந்தியா வெற்றி நடை போட்டு வருவதால் நான் கேப்டனாக இருக்கும் பட்சத்தில் அவருக்காக நான் விமர்சகர்களிடம் சண்டை போட்டிருப்பேன். அதாவது நாம் வெற்றிகளை பெற்று வருவதால் தற்சமயத்தில் அவர் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் வெற்றி அணியை கலைக்காமல் இருக்க வேண்டும் என்று விமர்சர்களிடம் நான் தெரிவித்திருப்பேன்”

Clarke

“தரமான வீரரான அவர் நிச்சயமாக கடினமாக உழைத்து ஃபார்முக்கு திரும்பி விடுவார் என்று ரசிகர்களிடம் கூறுவேன். அணி வெற்றி நடை போடும் நிலையில் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கக்கூடிய சில முக்கிய வீரர்களில் அவரும் ஒருவர். எனவே ராகுலின் இடத்துக்காக நான் விமர்சகர்களிடம் சண்டை போட்டிருப்பேன். மேலும் இந்த தொடரில் அவர் அவுட்டானது எனக்கு வருத்தத்தை கொடுக்கிறது. சில நேரங்களில் மழை பெய்வது உங்களை கொட்டுவது போல் இருக்கும். இது போன்ற நேரங்களில் உங்களைச் சுற்றி 20 ஃபீல்டர்கள் நிற்பது போல் தோன்றும்”

இதையும் படிங்க:IND vs AUS : இந்தியாவை சிதைத்த நேதன் லயன் – அனில் கும்ப்ளே, முரளிதரன், பெனட் ஆகியோரை மிஞ்சி 4 புதிய வரலாற்று சாதனை

“ஆனால் நல்ல ஃபார்மில் இருக்கும் போது அவை எதுவுமே தெரியாது. அது தான் பார்ம் என்பதாகும். நீண்ட நாட்களாக அதை மீட்டெடுக்க முடியாமல் தவித்தாலும் சிறந்த வீரர்கள் அதிலிருந்து மீண்டு வருவார்கள். எனவே ராகுல் தங்களுடைய சிறந்த வீரர் என்று இந்தியா நினைத்தால் அவர் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement