எனக்கு என்னமோ 65% அவங்க தான் ஜெயிப்பாங்கனு தோணுது, இந்தியா – இங்கிலாந்து செமி பைனல் பற்றி அஃப்ரிடியின் கணிப்பு இதோ

Afridi
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையின் சூப்பர் 12 சுற்று முடிந்து நாக் அவுட் சுற்று துவங்கியுள்ளது. அதில் நவம்பர் 9ஆம் தேதியன்று நடைபெறும் முதல் போட்டியில் வலுவான நியூசிலாந்தை கடைசி நேரத்தில் அதிர்ஷ்டத்தின் உதவியுடன் வந்த பாகிஸ்தான் எதிர்கொள்ளும் நிலையில் நவம்பர் 10ஆம் தேதியன்று உலகின் நம்பர் ஒன் டி20 கிரிக்கெட் அணியாக திகழும் இந்தியாவை வலுவான இங்கிலாந்து எதிர்கொள்கிறது. அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெறும் அந்த போட்டியில் வென்று பைனலுக்கு தகுதி பெறுவதற்காக இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

IND vs ENg Rohit Sharma Jos Buttler

- Advertisement -

குறிப்பாக தரவரிசையில் டாப் 2 இடங்களில் இருக்கும் இவ்விரு அணிகளில் ஏராளமான உலகத்தரம் வாய்ந்த நட்சத்திர வீரர்கள் இருப்பதால் இப்போட்டியில் வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதில் இந்த உலக கோப்பையில் லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா குரூப் 2 புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து அரை இறுதிக்கு வந்துள்ளது. மேலும் கடந்த ஒரு வருடத்தில் சமீபத்திய ஆசிய கோப்பையை தவிர்த்து களமிறங்கிய அத்தனை தொடர்களிலும் வென்று வலுவான அணியாக திகழ்கிறது. அதிலும் குறிப்பாக கடந்த ஜூலை மாதம் நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் சாய்த்த இந்தியா 2 – 1 என்ற கணக்கில் கோப்பையை வென்றது.

வெற்றி இங்கிலாந்துக்கே:

எனவே இப்போட்டியிலும் அதே போன்ற செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மறுபுறம் ஜோஸ் பட்லர் தலைமையில் அதிரடியான வீரர்களை கொண்ட இங்கிலாந்து இந்த உலகக் கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டு 2 – 1 (3) என்ற கணக்கில் டி20 தொடரை வென்றது. மேலும் இந்த உலகக் கோப்பையிலும் சிறப்பாக செயல்பட்டு அரையிறுதிக்கு வந்துள்ள அந்த அணி பைனலுக்கு தகுதி பெறும் அளவுக்கு தரமான வீரர்களை கொண்ட திறமையான அணியாக திகழ்கிறது.

Bhuvaneswar Kumar IND vs ENg

இந்நிலையில் சமபலம் கொண்ட இவ்விரு அணிகள் மோதுவதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த அரை இறுதி போட்டியில் இங்கிலாந்து வெல்வதற்கு 65% அதிக வாய்ப்புள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் சாகித் அப்ரிடி கனித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இவ்விரு அணிகளுமே சரிசமமாக சமநிலையை கொண்டுள்ளன. அதே போல இந்த தொடரில் இரு அணிகளும் சிறப்பாக செயல்பட்டு இந்த நிலையை எட்டியுள்ளன. மேலும் சமீப காலங்களில் அவர்களது செயல்பாடுகளும் சிறப்பாக இருந்துள்ளன. ஆனால் என்னுடைய கருத்துப்படி இங்கிலாந்தை 60 – 65% இந்தியாவுக்கு மேலே வைப்பேன்”

- Advertisement -

“ஏனெனில் பேட்டிங் அல்லது பவுலிங் அல்லது சுழல் பந்து வீச்சு துறை என எதுவாக இருந்தாலும் அவர்களது அணியில் சமநிலை அபாரமாக உள்ளது. இருப்பினும் இது மிகப்பெரிய அழுத்தம் வாய்ந்த போட்டி என்பதால் இதில் குறைவான தவறுகளை செய்யும் அணியில் 100% அர்ப்பணிப்புடன் செயல்பாடு செயல்பாடுகளை வெளிப்படுத்தும் அணியே இறுதியாக வெல்லும்” என்று கூறினார். அதாவது இரு அணிகளுமே சமமாக இருந்தாலும் இந்தியாவை விட இங்கிலாந்து சற்று அதிகப்படியான சமநிலையை கொண்டுள்ளதால் அவர்களே இப்போட்டியில் வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக சாகித் அப்ரிடி கணித்துள்ளார்.

Afridi

அத்துடன் நாக் அவுட் போட்டிகளில் குறைவான தவறுகள் செய்யும் அணியே வெல்லும் என்ற நிலையில் சமீப காலங்களில் அதில் இந்தியா அதிகப்படியான சொதப்பல்களை செய்யும் அணியாக திகழ்வதால் அதை பயன்படுத்தி இங்கிலாந்து வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக அவர் மறைமுகமாக கூறியுள்ளார். இதனால் இப்போட்டியில் வெல்லப் போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement