பாபரை விட சுமாரான டெக்னிக் கொண்ட விராட் கோலியை நானே ஈஸியா அவுட் பண்ணிருவேன் – முன்னாள் பாக் வீரர் அதிரடி

Naveed Ul Hasan 2
- Advertisement -

ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் களத்தில் வெற்றிக்கு போராடுவதுடன் களத்திற்கு வெளியேயும் வாய் வார்த்தைகளில் மோதிக்கொள்வது சர்வ சாதாரணமாகும். அதிலும் குறிப்பாக இந்திய கிரிக்கெட் வீரர்களை விட தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் சிறந்தவர் என்று அந்நாட்டு ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் அடிக்கடி ஒப்பிட்டு பெருமை பேசிக்கொள்வது வழக்கமாகும். அந்த வரிசையில் நவீன கிரிக்கெட்டில் இந்தியாவின் நாயகனாக போற்றப்படும் விராட் கோலியை விட பாபர் அசாம் தான் சிறந்தவர் என்பது கடந்த சில வருடங்களாகவே பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களின் நியாயமற்ற கருத்தாக இருந்து வருகிறது.

ஏனெனில் 2008 அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்று சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான விராட் கோலி குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தை பிடிக்கும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டு 2013 முதல் கடந்த 10 வருடங்களாக டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 25000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து 75 சதங்களை விளாசி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்து நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவனாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

ஈஸியா அவுட்டாக்குவேன்:
அதிலும் குறிப்பாக தரமான பவுலிங்கை கொண்டுள்ளோம் என்று பெருமை பேசும் பாகிஸ்தானுக்கு எதிராக 2012 டி20 உலக கோப்பை, 2015 உலகக்கோப்பை ஆகிய தொடர்களில் அதிக ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருது வென்ற அவர் 2022 டி20 உலக கோப்பையில் வரலாற்றின் மகத்தான இன்னிங்ஸ் விளையாடி இந்தியாவை தனி ஒருவனாக வெற்றி பெற வைத்ததை யாராலும் மறக்க முடியாது. மறுபுறம் 2017இல் அறிமுகமாகி விராட் கோலி ஃபார்மை இழந்த 2019க்குப்பின் 3 வகையான கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட்டு ஒருநாள் தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறிய பாபர் அசாம் பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரமாக நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.

ஆனாலும் இதுவரை ஐசிசி போன்ற பெரிய தொடர்களில் அழுத்தமான போட்டிகளில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தாத அவர் பெரும்பாலும் ஜிம்பாப்வே போன்ற கத்துக்குட்டிகளுக்கு எதிராக மட்டுமே சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஒரு தரப்பு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புள்ளி விவரங்களுடன் பேசுவதை சாதாரணமாகவே பார்க்கலாம். இந்நிலையில் விராட் கோலியை விட பேட்டிங் டெக்னிக் அடிப்படையில் பாபர் அசாம் தான் சிறந்தவர் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் நவீத்-உல்-ஹசன் அதிரடியான கருத்தைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் பாட்டம் ஹேண்ட் வீரரான விராட் கோலி கடந்த சில வருடங்களாகவே ஃபார்மை இழந்து தடுமாறி வருவதால் தாம் இப்போது விளையாடினால் கூட எளிதாக அவுட்டாக்கி விடுவேன் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு. “பாபர் அசாம் மற்றும் விராட் கோலி ஆகியோரை நாம் ஒப்பிடும் போது நான் எப்போதுமே அவரை விட பாபர் டெக்னிக்கல் அளவில் சிறப்பானவர் என்று சொல்லி வருகிறேன். அதனாலேயே பாபர் அசாம் அரிதாக சுமாராக செயல்படுகிறார்”

“மறுபுறம் விராட் கோலி கடந்த ஒன்று முதல் ஒன்றரை வருடங்கள் தொடர்ந்து தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறார். ஏனெனில் அவர் பாட்டம் ஹேண்ட் வீரர் ஆவார். அவரைப் போன்ற வீரர்கள் ஒரு முறை ஃபார்மை இழந்தால் அதிலிருந்து மீள்வதற்கு நீண்ட நாட்களாகும். எனவே பாபர் அசாம் டெக்னிக்கல் அளவில் மிகவும் சிறப்பான வீரர். ஆனால் விராட் கோலியிடம் நிறைய ஷாட்டுகள் இருக்கிறது. இருப்பினும் தன்னிடம் இருக்கும் குறைந்த ஷாட்டுகளை வைத்தே பாபர் அசாம் அவரை விட சிறப்பாக செயல்பட்டு வருகிறார்”

இதையும் படிங்க:யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே இப்படி அசத்த இதுதான் காரணம் – கிரிக்கெட் நிபுணர் கொடுத்த விளக்கம்

“இந்தியாவில் இருக்கும் பிட்ச்கள் பேட்டிங்க்கு சாதகமாக இருந்து வருவதாலேயே அங்கு விராட் கோலி உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை ஐபிஎல் தொடரில் எதிர்கொண்டு நிறை ஷாட்களை விளையாட பழகி தன்வசம் வைத்துள்ளார். அத்துடன் ஒருவேளை தற்போது நான் பழைய ஃபார்மில் இருந்தால் இந்த 2 வீரர்களில் நான் விராட் கோலியை எளிதாக அவுட்டாக்குவேன். குறிப்பாக என்னிடம் நல்ல அவுட் ஸ்விங் இருப்பதால் அவரை விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுக்க வைத்து அவுட்டாக்குவேன்” என்று கூறினார்.

Advertisement