முதல்ல இவர டி20 உ.கோ டீம்ல எடுங்கய்யா.. ஜிதேஷ் சர்மா பேட்டியால் இந்திய ரசிகர்கள் வரவேற்பு

Jitesh Sharma
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்திய 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மொகாலியில் நடைபெற்ற அந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 159 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு சிவம் துபே அதிரடியாக 60* ரன்கள் குவித்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

அவருடன் மிடில் ஆர்டரில் 72/3 என இந்தியா தடுமாறிய போது களமிறங்கிய ஜித்தேஷ் சர்மா அதிரடியாக விளையாடி 5 பவுண்டரியுடன் 31 (20) ரன்களை 155.00 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார். குறிப்பாக தன்னுடைய அரை சதத்தைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து அதிரடியாக விளையாடும் முனைப்புடன் பேட்டிங் செய்த காரணத்தால் அவர் அவுட்டானார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

ரசிகர்கள் வரவேற்பு:
இந்நிலையில் 1 பந்தில் முடிவுகள் மாறக்கூடிய டி20 கிரிக்கெட்டில் எப்போதுமே குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடுவது தமக்கு பிடிக்காது என ஜிதேஷ் சர்மா கூறியுள்ளார். அதனால் பெரும்பாலான போட்டிகளில் ஸ்டிரைக் ரேட்டை விட்டுக் கொடுக்காமல் விளையாட முயற்சிப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி முதல் போட்டியின் முடிவில் பேசுவது பின்வருமாறு.

“நான் எப்போதுமே ஸ்ட்ரைக் ரேட்டுக்காக விளையாடுவேன். ஸ்ட்ரைக் ரேட்டை நான் எப்போதுமே விட்டுக் கொடுக்க விரும்புவதில்லை. அவ்வாறு விளையாடுவது அடுத்து வரும் பேட்ஸ்மேன்களின் வேலையை எளிதாக்கும். எப்போதும் நான் போட்டியை என்னுடைய அணிக்காக ஃபினிஷிங் செய்ய விரும்புகிறேன். எனவே நிலையாக விளையாடி கடைசி வரை நின்று நிறைய போட்டிகளில் வெற்றியை பெற்றுக் கொடுக்க நான் முயற்சிக்கிறேன்” என்று கூறினார்.

- Advertisement -

அந்த வகையில் ரன்களுக்காக விளையாடும் பல வீரர்களுக்கு மத்தியில் ஸ்ட்ரைக் ரேட்டுக்காக விளையாடுகிறேன் என்று ஜித்தேஷ் சர்மா சொல்வது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைக்கிறது என்றே சொல்லலாம். ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் 40 பந்துகளில் 60 ரன்கள் எடுப்பதை விட 15 பந்துகளில் 40 ரன்கள் எடுப்பதே வெற்றியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க: ரோஹித், கோலிக்கே இந்த நிலைமையா? டீம்’ன்னா இந்தியா மாதிரி இருக்கணும்.. லெஜெண்ட் க்ளைவ் லாய்ட்

அந்த நிலையில் கடந்த சில வருடங்களாகவே ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிகள் கடைசி நேரத்தில் களமிறங்கி அரை சதங்களைப் பற்றி கவலைப்படாமல் அதிரடியாக விளையாடி வருவதன் காரணமாகவே இந்திய அணியில் ஜிதேஷ் சர்மா வாய்ப்பு பெற்றுள்ளார். அந்த வாய்ப்பிலும் ஓரளவு அசத்தலாக செயல்படுவதால் இவரை 2024 டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் தேர்வு செய்யாமல் விடாதீர்கள் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வரவேற்பையும் பாராட்டையும் தெரிவிக்கின்றனர்.

Advertisement