2013 முதல் 10 வருஷம்.. எப்படி ஐபிஎல் ஜெயிக்கிறதுன்னு எனக்கு தெரியும்.. மனம் திறந்த ரோஹித்

Rohit Sharma Mi
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது. இத்தனைக்கும் மும்பைக்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித் சர்மா வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார். அதனால் இந்திய கேப்டனாகவும் முன்னேறியுள்ள அவரை வருங்காலத்தை கருத்தில் கொண்டு மும்பை கழற்றி விட்டுள்ளதற்கு அந்த அணி ரசிகர்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஐபிஎல் எப்படி வேலை செய்யும் அதில் எப்படி கோப்பையை வெல்ல முடியும் என்ற சூட்சமம் தமக்கு தெரியும் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இது பற்றி ஆடம் கில்கிறிஸ்ட் யூடியூப் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இத்தனை வருடங்கள் கடந்தும் இது தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் கதையாக இருக்கிறது. ஆரம்பத்தில் நாங்கள் சில தோல்விகளுடன் தொடரை மெதுவாக துவங்கி பின்னர் மாறுவோம்”

- Advertisement -

வெற்றிகாரமான கேப்டன்:
“கடந்த 10 வருடங்களாக கேப்டன் பதவியில் தேக்க நிலை இருந்தது. பயிற்சியாளர்கள் மாறினாலும் கேப்டன் ஒருவராக இருந்தார். உண்மையில் நான் ஒரு வித சிந்தனை செயல்முறையுடன் மும்பை அணிக்கு சென்றேன். அணிக்குள் வரும் புதிய நபர்கள் என்னுடைய சிந்தனை செயல்முறைகளை பின் தொடர விரும்பினேன். ஏனெனில் ஐபிஎல் எப்படி செயல்படுகிறது அதில் ஒரு அணி வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நான் அறிவேன்”

“பழக்கமில்லாத அனைவரையும் கப்பலில் ஏற்றிக்கொண்டு வெற்றிகரமாக செல்வதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். வான்கடே கிரிக்கெட் மைதானத்தை பற்றி நான் அறிவேன். அங்கே நான் வளர்ந்ததால் என்ன வேலை செய்யும், வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். எடுத்துக்காட்டாக மிட்சேல் ஜான்ஷன் பிட்ச்சில் வேகமாக அடித்து பந்து வீசக்கூடியவர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அது வான்கடேவில் வேலை செய்யாது என்பதை நான் அறிவேன்”

- Advertisement -

“அங்கே நீங்கள் பந்தை கொஞ்சம் ஃபுல்லாக பிட்ச் செய்து ஸ்விங் செய்ய வேண்டும். எனவே கொஞ்சம் வித்தியாசமாக செயல்படுவது பற்றி அவரிடம் நாங்கள் பேசினோம். 2013இல் மலிங்கா, ஜான்சனுடன் பும்ரா இருந்தார். ஆனால் அவர் இன்றைய பும்ராவாக இல்லை. ஐபிஎல் தொடரில் நிறைய வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வீரர்கள் விளையாடுவார்கள். அவர்களை என்னுடைய சிந்தனை செயல்முறையில் கொண்டு வர முயற்சிப்பேன்”

இதையும் படிங்க: கில் – ஜெய்ஸ்வால் ஆகியோரில் யார் 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாட வேண்டும்.. ஜஹீர், மோர்கன் தேர்வு

“ஏனெனில் வெற்றி பெறுவதற்கு கேப்டன் மற்றும் வீரர்களிடையே சமநிலை இருக்க வேண்டும். அதுவே ஐபிஎல் தொடரில் உள்ள சவாலாகும். அதே சமயம் வெற்றிக்கு ஒருவர் மட்டும் வேலை செய்யக்கூடாது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு நான் ரிக்கி பாண்டிங், மகிளா ஜெயவர்த்தனே, தற்போது மார்க் பவுச்சர் போன்ற பயிற்சியாளர்களின் உதவியையும் நாடினேன்” என்று கூறினார்.

Advertisement