IND vs ENG : அவருக்கும் கேப்டன்ஷிப் அனுபவமில்ல ஆனால் கப் வாங்குனாரு, அவரை பாலோ செய்யபோகிறேன் – பும்ரா ஓப்பன்டாக்

Bumrah
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் ஜூலை 1-ஆம் தேதியன்று பர்மிங்காம் நகரில் இந்தியா களமிறங்குகிறது. கடந்த வருடம் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட விராட் கோலி தலைமையிலான இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 4 போட்டிகளில் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்ற போது ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டி தற்போது நடைபெறுகிறது. எனவே இப்போட்டியில் வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

indvseng

- Advertisement -

ஏனெனில் கடந்த முறை திணறிக் கொண்டிருந்த இங்கிலாந்து இம்முறை புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையில் வலுவான அணியாக மாறியுள்ளது. அதனால் இப்போட்டியில் வென்று 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்வோம் என்று ஏற்கனவே அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மறுபுறம் ஏற்கனவே விராட் கோலி பெற்றுக் கொடுத்த வெற்றியை புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா பினிஷிங் செய்து 2007க்கு பின் 15 வருடங்கள் கழித்து இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்க காத்துக் கொண்டிருந்தார்.

பும்ரா கேப்டன்:
அதற்காக ஒரு வாரம் முன்பாகவே அவரது தலைமையில் இங்கிலாந்து சென்ற இந்திய அணியினர் லீசெஸ்டர்ஷைர் கவுண்டி அணிக்கு எதிரான 4 நாட்கள் பயிற்சி போட்டியில் பங்கேற்றது. அதில் முதல் இன்னிங்சில் களமிறங்கிய ரோஹித் சர்மா 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 2-வது இன்னிங்ஸ்சில் காயத்தால் களமிறங்கவில்லை என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கரோனாவால் தனிமை படுத்தப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ அறிவித்தது அதிர்ச்சிகரமாக அமைந்தது. கடந்த 2 – 3 நாட்களாக தனிமைப் படுத்தப்பட்டு மீண்டும் மீண்டும் செய்யப்பட்ட பரிசோதனையில் அவர் குணமடையாததால் இப்போட்டிக்கு ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக செயல்படுவார் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Jasprith Bumrah Rohit Sharma Wisden.jpeg

அதைத் தொடர்ந்து இந்தியாவின் 36-வது டெஸ்ட் கேப்டன் என்ற பெயரைப் பெற்றுள்ள ஜஸ்பிரித் பும்ரா ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் 35 வருடங்கள் கழித்து இந்தியாவை வழி நடத்தும் வேகப்பந்து வீச்சாளர் என்ற சரித்திரத்தையும் படைத்துள்ளார். இருப்பினும் ஏற்கனவே கேஎல் ராகுல் காயத்தால் விலகிய நிலையில் தற்போது கேப்டன் ரோகித் சர்மாவும் இல்லாததால் அவரது தலைமையில் முன்னாள் கேப்டன் விராட் கோலி உட்பட எஞ்சிய அனைவரும் இந்தியாவின் வெற்றிக்காகப் போராடி உள்ளனர்.

- Advertisement -

கேப்டன்ஷிப் அனுபமில்லையே:
பொதுவாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் டெஸ்ட் அணியின் கேப்டனாவது அரிதான விஷயம் என்ற நிலைமையில் அதை தொட்டுள்ள ஜஸ்பிரித் பும்ரா உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவமில்லாதவராக இருக்கிறார். சமீப காலங்களில் ரவீந்திர ஜடேஜா, மயங்க் அகர்வால், ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் கேப்டன்ஷிப் அழுத்தத்தால் சொந்த ஆட்டத்தில் தடுமாறிய நிலைமையில் இவரால் சிறப்பாக செயல்பட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Bumrah

இந்நிலையில் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி 2007இல் இந்தியாவிற்கு கேப்டனாவதற்கு முன்பாக உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவத்தை பெறாத போதிலும் இந்தியாவுக்காக அனைத்து விதமான உலக கோப்பைகளையும் வென்று காட்டினார் என்று கூறும் ஜஸ்பிரித் பும்ரா அவரை பின்பற்ற உள்ளதாக வெளிப்படையாக பேசியுள்ளார். இது பற்றி கேப்டனாக பொறுப்பேற்றதும் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அழுத்தம் இருக்கும் போது பெறும் வெற்றிதான் சுவையாக இருக்கும். எப்போதும் பொறுப்பை ஏற்க விரும்பும் நான் சவால்களை விரும்பி எதிர்கொள்கிறேன். ஒரு வீரராக எப்போதும் கடினமான தருணத்தில் உங்களை சோதிக்க வேண்டும். மேலும் நிறைய கிரிக்கெட் வீரர்களிடம் பேசியுள்ளேன். அவர்கள் அனைவரும் முன்னேறி சிறந்தவர்களாக மாறிக்கொண்டே இருக்கிறார்கள்”

Bumrah-and-Dhoni

“ஒருமுறை எம்எஸ் தோனியிடம் நான் பேசியதை நினைவில் வைத்துள்ளேன். அவர் இந்தியாவை முதல் முறையாக வழி நடத்துவதற்கு முன்பாக எந்த அணிக்கும் கேப்டனாக செயல்பட்டதில்லை என்று கூறினார். தற்போது அவர் வரலாற்றின் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். எனவே இதற்கு முன்பு நான் என்ன சாதித்தேன் என்பதை விட்டுவிட்டு அணியின் வெற்றிக்காக எப்படி உதவலாம் என்பதில் கவனம் செலுத்த உள்ளேன்” என்று கூறினார்.

- Advertisement -

“இந்தியாவுக்கு விளையாட வேண்டும் என்பதே எனது வாழ்வின் மிகப்பெரிய கனவு என்ற நிலையில் கேப்டனாவது எனது கேரியரில் மிகப்பெரிய சாதனையாகும். இந்த வாய்ப்புக்காக மிகவும் மகிழ்ச்சியடையும் நான் என் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். இந்த செய்தியை ஒருசில நேரங்கள் முன்பாக மட்டுமே அறிந்த நான் அதை முதலில் எனது குடும்பத்திடம் தெரிவித்தேன். இப்போட்டியின் பிட்ச் பற்றி பயிற்சியாளர் டிராவிட் உடன் பேசியுள்ளேன்.

இதையும் படிங்க : டி20 உ.கோ அணியிலும் தினேஷ் கார்த்திக்கு இடம் உறுதி – நேற்று வெளியான இந்த அறிவிப்பை கவனிச்சீங்களா?

அதற்கேற்றார்போல் எங்களின் தொடக்க வீரர்களை தேர்வு செய்தாலும் இப்போது அதை நாங்கள் கூற விரும்பவில்லை. மேலும் ரோகித் சர்மா விளையாடாடது இந்தியாவிற்கு மிகப் பெரிய இழப்பாகும்” என்று கூறினார்.

Advertisement