டி20 உ.கோ அணியிலும் தினேஷ் கார்த்திக்கு இடம் உறுதி – நேற்று வெளியான இந்த அறிவிப்பை கவனிச்சீங்களா?

Dinesh-Karthik
- Advertisement -

இந்திய அணியின் சீனியர் வீரரும், தமிழக கிரிக்கெட்ருமான தினேஷ் கார்த்திக் டி20 கிரிக்கெட்டில் விளையாடி இந்திய அணிக்காக உலக கோப்பையை வென்று தரவேண்டும் என்பதே தனது இலக்கு என்று நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பிடித்தார். நடைபெற்ற முடிந்த ஐபிஎல் தொடரில் ஃபினிஷராக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக் தென்னாப்பிரிக்க தொடரிலும் அதிரடியாக விளையாடி இருந்ததன் காரணமாக அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலும் அவருக்கு இடம் கிடைத்தது.

Dinesh Karthik vs RSA

- Advertisement -

முன்பு எப்போதும் இல்லாத அளவு பினிஷர் ரோலில் மிகவும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவருக்கு அயர்லாந்து தொடருக்கான அணியிலும் இடம் கிடைத்தது. இதனை தொடர்ந்து அவருக்கு டி20 உலகக் கோப்பை அணியிலும் இடம் தர வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் இருந்து ஆதரவுகள் குவிந்து வரும் வேளையில் தற்போது கிட்டத்தட்ட தினேஷ் கார்த்திக் டி20 உலககோப்பை தொடருக்கான அணியிலும் தனது இடத்தை உறுதி செய்துவிட்டார் என்றே கூறலாம்.

ஏனெனில் ஏற்கனவே பிசிசிஐ-யின் தலைவரான சவுரவ் கங்குலி டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியை தயார் செய்யும் வகையில் இங்கிலாந்து தொடரிலேயே பல வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு அவர்களது திறன் சோதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அந்த வகையில் நேற்று வெளியான இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இரண்டு அணியிலும் தினேஷ் கார்த்திக்கின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது இதன் மூலமாக அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவது உறுதி ஆகியுள்ளது.

Dinesh Karthik and Hardik Pandya

இப்படி இங்கிலாந்து தொடரில் தினேஷ் கார்த்திக் விளையாடி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வேளையில் அவர் தவிர்க்க முடியாத வீரராக டி20 உலக கோப்பை அணியில் இடம் பெறுவார் என்பது உறுதி. அதே வேளையில் தினேஷ் கார்த்திக்கின் இடம் குறித்து ஏற்கனவே பேசியிருந்த பி.சி.சி.ஐ-யின் தலைவர் கங்குலி கூறுகையிலும் : இங்கிலாந்து டி20 தொடருக்காக தேர்வு செய்யப்படும் அணியில் இடம் பெறும் வீரர்கள் பெரும்பாலும் டி20 உலக கோப்பை தொடர் வரை விளையாடுவார்கள்.

- Advertisement -

அதனால் டி20 உலககோப்பை வரை பெரிய அளவில் இந்திய அணியில் மாற்றம் இருக்காது. ஒரு நிலையான அணியைத் தான் டி20 உலக கோப்பையிலும் விளையாட வைப்போம் அதுவே எங்களுக்கு திட்டம் என்றும் கூறியிருந்தார். அதன்படி இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம் பிடித்துள்ள தினேஷ் கார்த்திக் நிச்சயம் டி20 உலக கோப்பையிலும் விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க : IND vs ENG : 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான 2 வகையான இந்திய அணி அறிவிப்பு – 18 பேர் கொண்ட முழுலிஸ்ட் இதோ

அதோடு இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிடும் தொடர்ச்சியாக வீரர்களின் செயல்பாட்டை உன்னிப்பாக கவனித்து வரும் வேளையில் சரியான அணியை கொண்டு செல்வார் என்பதனால் பின் வரிசையில் ஹார்டிக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement