IND vs ENG : 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான 2 வகையான இந்திய அணி அறிவிப்பு – 18 பேர் கொண்ட முழுலிஸ்ட் இதோ

Indian-Team
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது இன்று எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஜூலை 1-ஆம் தேதி துவங்கும் இந்த டெஸ்ட் போட்டியானது ஜூலை 5-ஆம் தேதி நிறைவடைகிறது. அதனை தொடர்ந்து ஜூலை 7, 9, 10 ஆகிய தேதிகளில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியை தற்போது பி.சி.சி.ஐ-யானது அதிகாரவபூர்வமாக வெளியிட்டுள்ளது.

Indian Team

- Advertisement -

அதன்படி இந்த கடைசி டெஸ்ட் போட்டியில் கொரோனா காரணமாக விலகியுள்ள ரோஹித் சர்மா மீண்டும் டி20 தொடரில் கேப்டனாக திரும்புகிறார். அதே வேளையில் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராத் கோலி, ஜடேஜா, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், பும்ரா ஆகியோருக்கு முதலாவது டி20 போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் அவர்கள் அணிக்கு திரும்புகிறார்கள் என்பதனால் முதல் போட்டிக்கு தனியாக ஒரு டி20 அணியும், இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளுக்கு தனியாக டி20 அணியும் பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி முதல் டி20 போட்டியில் ஓய்வில் இருக்கும் இந்த குறிப்பிட்ட முன்னணி வீரர்களுக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ராகுல் திரிப்பாதி மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

Team India Dinesh Karthik Ishan Kishan

இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் அவர்கள் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக டெஸ்ட் போட்டியில் விளையாடிய விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா மற்றும் பும்ரா ஆகியோர் விளையாடுகின்றனர். மேலும் ஒரு சில மாற்றங்கள் இந்த முதலாவது டி20 போட்டிக்கான அணிக்கும், இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டிக்கான அணியிலும் நிகழ்ந்துள்ளன.

- Advertisement -

அதன்படி முதலாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் முழு லிஸ்ட் இதோ : 1) ரோஹித் சர்மா, 2) இஷான் கிஷன், 3) ருதுராஜ் கெய்க்வாட், 4) சஞ்சு சாம்சன், 5) சூரியகுமார் யாதவ், 6) தீபக் ஹூடா, 7) ராகுல் திரிப்பாதி, 8) தினேஷ் கார்த்திக், 9) ஹார்டிக் பாண்டியா, 10) வெங்கடேஷ் ஐயர், 11) யுஸ்வேந்திர சாஹல், 12) அக்சர் படேல், 13) ரவி பிஷ்னாய், 14) புவனேஷ்வர் குமார், 15) ஹர்ஷல் படேல், 16) ஆவேஷ் கான், 17) அர்ஷ்தீப் சிங், 18) உம்ரான் மாலிக்

இதையும் படிங்க : IND vs ENG : 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – 17 பேர் கொண்ட முழுலிஸ்ட் இதோ

இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் முழுலிஸ்ட் இதோ : 1) ரோஹித் சர்மா, 2) இஷான் கிஷன், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) சூரியகுமார் யாதவ், 6) தீபக் ஹூடா, 7) ரிஷப் பண்ட், 8) தினேஷ் கார்த்திக், 9) ஹார்டிக் பாண்டியா, 10) ரவீந்திர ஜடேஜா, 11) யுஸ்வேந்திர சாஹல், 12) அக்சர் படேல், 13) ரவி பிஷ்னாய், 14) புவனேஷ்வர் குமார், 15) ஹர்ஷல் படேல், 16) ஆவேஷ் கான், 17) பும்ரா, 18) உம்ரான் மாலிக்

Advertisement