அந்த பையனிடம் திறமை இருக்கு, 2 – 3 மேட்ச் நல்லா அடிப்பார் அதன்பின் ஏமாற்றிவிடுவார் – கபில் தேவை வருந்த வைக்கும் இந்திய வீரர்

kapil dev
Advertisement

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இதுவரை நிறைவு பெற்றுள்ள 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா முன்னிலை வகிக்கிறது. தற்போதைய நிலைமையில் கடைசி 2 போட்டிகளிலும் வென்றால் மட்டுமே சொந்த மண்ணில் இந்த தொடரை வென்று கோப்பையை வெல்ல முடியும் என்ற இக்கட்டான நிலைமையில் இந்தியா தவிக்கிறது. வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் விளையாடும் தரமான இந்திய வீரர்களை கண்டறியும் ஒரு தொடராகவே இது பார்க்கப்படுகிறது. அதன் காரணமாகவே இந்த தொடரில் சமீபத்திய ஐபிஎல் தொடரில் அசத்திய பெரும்பாலான வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

DInesh Karthik

டி20 உலகக்கோப்பையில் விளையாடப் போகும் ஒவ்வொரு வீரர்களை தேர்வு செய்வது முக்கியமான வேலை என்ற நிலைமையில் தரமான விக்கெட் கீப்பரை தேர்வு செய்வது பெரிய சவாலாக இருக்கிறது. ஏனெனில் தென்ஆப்ரிக்க தொடரில் விளையாடும் 11 பேர் அணியிலேயே ரிசப் பண்ட், இஷான் கிசான், தினேஷ் கார்த்திக் என 3 விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். இதுபோக காயத்தால் வெளியேறிய கேஎல் ராகுலும் ஒரு விக்கெட் கீப்பர் ஆவார். இத்துடன் சஞ்சு சாம்சன் போன்ற ஒரு சிலரும் வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

தரமான சஞ்சு ஆனால்:
இதில் இந்த வருட ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானை கேப்டனாக வழிநடத்திய கேரள வீரர் சஞ்சு சாம்சன் ஜாம்பவான் ஷேன் வார்னேவுக்கு பின் 13 வருடங்கள் கழித்து அந்த அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்று அசத்தினார். அதேபோல் ஒரு பேட்ஸ்மேனாகவும் 17 போட்டிகளில் 458 ரன்களை 146.79 என்ற சூப்பரான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்த அவருக்கு தற்போதைய தென் ஆப்ரிக்க தொடரில் வாய்ப்பு கிடைக்காதது பல ரசிகர்களை முன்னாள் வீரர்களை கேள்வி எழுப்ப வைத்தது.

sanju samson

அந்த அளவுக்கு திறமை வாய்ந்த சஞ்சு பெரும்பாலான போட்டிகளில் அதிரடியான பவுண்டரிகளை பறக்க விட்டு சிறப்பாக தொடங்கிறார். ஆனால் அதை பெரிய ரன்களாக மாற்ற முடியாமல் பெரும்பாலான போட்டிகளில் தோல்வியடைவதே அன்று முதல் இன்று வரை அவரிடம் நிலவும் ஒரே பிரச்சனையாகும். அதனாலேயே இந்திய கேப்டன்களூம் தேர்வுக் குழுவினரும் அவர் மீது முழு நம்பிக்கை வைக்க யோசிக்கின்றனர். அதன் காரணத்தாலேயே 2015இல் இந்தியாவுக்காக முதல் முறையாக அறிமுகமான இவர் இதுவரை வெறும் 13 டி20 போட்டிகளிலும் 1 ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார்.

- Advertisement -

கபில் தேவ் வருத்தம்:
இந்த வருடம் கூட 458 ரன்களை 146.79 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் எடுத்த அவர் 28.63 என்ற சுமாரான சராசரியில் மட்டுமே எடுத்தார். அதாவது அனைத்து திறமைகளையும் கொண்டுள்ள சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக பெரிய அளவில் எப்போதுமே எடுத்ததில்லை என்பதை பிரச்சனையாகும். இதனாலேயே ஒன்று அவருக்கு முழுமையான வாய்ப்பு கிடைப்பதில்லை அல்லது கிடைத்த ஒருசில வாய்ப்புகளிலும் சிறப்பாக செயல்பட்டு அவர் அதை பொன்னாக மாற்ற தவறுவது என்று அவரின் இந்திய கிரிக்கெட் கேரியர் உச்சத்தை தொடாமல் வீழ்ச்சிலேயே சென்று கொண்டிருக்கிறது.

Kapil-Dev

இந்நிலையில் சஞ்சு சாம்சனிடம் நல்ல திறமை இருந்தாலும் அதை தொடர்ச்சியாக பயன்படுத்தத் தவறி வருவதாக முன்னாள் இந்திய ஜாம்பவான் கேப்டன் கபில்தேவ் வருத்தத்தை தெரிவித்துள்ளார். இந்திய விக்கெட் கீப்பர்கள் பற்றி சமீபத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையை சொல்ல வேண்டுமெனில் அந்த 3 பேரில் (இஷான் கிசான், தினேஷ் கார்த்திக், சஞ்சு சாம்சன்) ஒரு சிறந்த விக்கெட் கீப்பரை தேர்வு செய்யுமாறு என்னை கேட்டால் அந்த மூவருமே கிட்டத்தட்ட ஒரே அளவில்தான் உள்ளனர். அவர்களில் பெரிய வித்தியாசத்தை என்னால் கூற முடியவில்லை. ஆனால் பேட்டிங் அடிப்படையில் ஒவ்வொருவரும் மற்றவரை விட சிறந்தவர்களாக உள்ளனர். ஒரு நாளில் அந்த மூவருமே இந்தியாவுக்காக போட்டியை வெல்லும் திறமை பெற்றுள்ளார்கள்”

- Advertisement -

“ரிதிமான் சஹாவை பற்றி நீங்கள் பேசினால் அந்த மூவரில் அவர் சிறந்த பேட்ஸ்மென் என்று நான் கூறுவேன். ஆனால் மீதமுள்ளவர்கள் மிகவும் உயர்ந்த பேட்ஸ்மேன்கள். இருப்பினும் சஞ்சு சாம்சன் மீது நான் மிகவும் வருத்தமாக இருக்கிறேன். ஏனெனில் அவர் அவ்வளவு திறமைசாலி. ஆனாலும் அந்த பையன் 1 – 2 போட்டிகளில் சிறப்பாக ரன்களை அடித்து பின்னர் தோல்வியடைந்து விடுகிறார். அவரிடம் நிலைத்தன்மை இல்லை” என்று கூறினார்.

இதேபோல் சஞ்சு சாம்சன் திறமையானவர் ஆனால் 10 வருடங்களாக தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படும் யுத்தியை இன்னும் கண்டுபிடிக்காமல் சுமாரானவராக தென்படுகிறார் என்று மற்றொரு முன்னாள் இந்திய ஜாம்பவான் ரவி சாஸ்திரியும் சமீபத்தில் தனது அக்கறை கலந்த அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement