ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடுமாற்றமாக விளையாடி வருகிறது. அதற்குக் காரணம் தோனி என்று எதிரணி ரசிகர்கள் கிண்டலடித்து விமர்சித்து வருகின்றனர். மேலும் காலம் கடந்த 43 வயதில் விளையாடாமல் தோனி ஓய்வு பெற்று வீட்டில் அமர வேண்டும் என்றும் எதிரணி ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றார்கள்.
அதே போல சிஎஸ்கே அணி தோல்வியை சந்திக்கும் நாட்களில் எல்லாம் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடுவை ஆர்சிபி ரசிகர்கள் தேடி சென்று சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகிறார்கள். ஏனெனில் கடந்த காலங்களில் பலமுறை சிஎஸ்கே அணிக்கு ஆதரவாக ராயுடு பேசியுள்ளார். மேலும் 2024 சீசனில் கடைசிப் போட்டியில் சென்னையை தோற்கடித்த பெங்களூரு பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றதைக் கோப்பையை வென்றது போல் கொண்டாடியது.
பச்சோந்தி தோனி, ராயுடு:
அப்போது பெங்களூரு அணியையும் ஆர்சிபி ரசிகர்களையும் ராயுடு கிண்டலடித்தார். அதன் காரணமாக சிஎஸ்கே தோற்கும் போதெல்லாம் ராயுடுவை ஆர்சிபி ரசிகர்கள் தேடி சென்று கிண்டலடிக்கின்றனர். அந்த நிலையில் சமீபத்தில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் வர்ணனையாளர்களாக ராயுடு மற்றும் நவ்ஜோத் சித்து பங்கேற்றனர்.
அப்போது “பச்சோந்தி எப்படி அடிக்கடி நிறத்தை மாற்றி கொள்ளுமோ அதே போல நீங்கள் ஒரே அணிக்காக ஆதரவு கொடுக்காமல் அணியை அடிக்கடி மாற்றிக் கொள்கிறீர்கள் பாஜி” என்று ராயுடு ஜாலியாக சித்துவிடம் சொன்னார். அதற்கு ராயுடுவுக்கு மட்டுமின்றி அவருடைய ரோல் மாடலான தோனியையும் சேர்த்து பச்சோந்தி என்று சித்து வர்ணித்து பதிலடிக் கொடுத்தார்.
தல ரசிகன் தான்:
இது பற்றி சித்து பேசியது பின்வருமாறு. “பச்சோந்தி போல யாராவது இங்கு இருந்தால் அது நீங்களும், உங்களுடைய ரோல் மாடலும் (தோனி) தான்” என்று கூறினார். அவருடைய இந்தக் கருத்து சிஎஸ்கே ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தம்மை சமூக வலைதளங்களில் தேவையின்றி கிண்டலடிக்கும் நபர்களுக்கு ராயுடு பதிலடி கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: இம்பேக்ட் பிளேயர் ஐபிஎல்’க்கு நல்லருந்தாலும் இந்தியாவுக்கு ஆபத்து தான்.. ஜாம்பவான் டிராவிட் எச்சரிக்கை
இது பற்றி ட்விட்டரில் (எக்ஸ்) ராயுடு கூறியுள்ளது பின்வருமாறு. “நான் தல ரசிகனாக இருந்தேன். தல ரசிகனாக இருக்கிறேன். எப்போதும் தல ரசிகனாக இருக்கப் போகிறேன். யார் என்ன நினைக்கிறார்கள் என்பது ஒரு பொருட்டல்ல. அது 1% கூட வித்தியாசத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. எனவே என்னைப் பற்றி கிண்டலடிப்பதற்காக பணத்தை செலவிடுவதை நிறுத்துங்கள். அந்த பணத்தை ஏதேனும் அறக்கட்டளைக்கு தானமாக கொடுங்கள். நிறைய ஏழை மக்கள் பயன் பெறுவார்கள்” என்று கூறியுள்ளார்.



