தோனி, கோலி அணியின் கீழ் விளையாடுவது எனக்கு பெருமைதான் – சுழற்பந்து வீச்சாளர் நெகிழ்ச்சி

yadaav
- Advertisement -

உலகின் தலைச்சிறந்த கிரிக்கெட் வீரர்களான இருவரும் இந்திய அணியின் தூண்களாகவும்,கேப்டன்களாகவும் பொறுப்பேற்று எதிரணியிரனை பல தொடர்களில் மண்டியிடவைத்து வெற்றிகளை நம்வசமாக்கிய வீரர்கள்.இவர்கள் இருவரும் இருக்கும் அணியில் நானும் இருப்பது எனக்கு கிடைத்த வரம் என்றே சொல்வேன் நானென்று மகிழ்ச்சியுடன் கூடிய நெகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றார் குல்தீப் யாதவ்.

KuldeepYadav

- Advertisement -

தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்த காலத்தில் ஐ.சி.சி.,யின் அனைத்து கோப்பைகளையும் வென்று தந்து உலகளவில் தலைசிறந்த அணியாக இந்திய அணியை மாற்றினார். சில சர்ச்சைகளின் காரணமாக சென்ற வருடம் தானாக முன்வந்து கேப்டன் பதவியை ராஜினாமா செய்ய விராட்கோலிக்கு கேப்டன் பதவி வழங்கப்பட விராட் கோஹ்லியின் தலைமையில் விக்கெட்கீப்பராகவும் அணியில் ஒருவீரராகவும் விளையாடி வருகிறார்.

விராட்கோலி என்னதான் கேப்டன் பதவியில் இருந்தாலுமே தோனியை கேட்காமல் எந்தவொரு தனிப்பட்ட முடிவையும் எடுக்கமாட்டார்.இக்கட்டான சூழலில் விராட்கோலி தோனியை கலந்தாலோசித்து சில முடிவுகளை எடுப்பார். அப்படி தோனியின் ஆலோசனைப்படி எடுக்கப்படும் பல முடிவுகள் இந்திய அணிக்கு வெற்றியையே தேடித்தந்துள்ளன.

yadav

நடந்து முடிந்த தென்ஆப்பிரிக்க தொடரிலும் கூட யார் எப்போது பந்துவீச வேண்டும்,எந்த திசையில் பந்து வீச வேண்டும், யாரை எங்கு பீல்டிங்கில் நிறுத்தவேண்டுமென்று தோனி தான் பெரும்பாலும் முடிவு செய்வார்.

தோனி மற்றும் கோலி இருவருமே இந்திய அணிக்கு கிடைத்த பொக்கிஷங்கள். அவர்களிடம் கற்றுக்கொள்ள கடலளவு இருக்கின்றது. அவர்கள் விளையாடும் சமகாலத்தில் அவர்களோடு இணைந்து விளையாட எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை நான் வரமாகவே நினைக்கின்றேன் என்று பெருமிதத்துடன் பேசினார்.

Advertisement