இந்திய அணியின் ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோஹித் ஷர்மா சமீப காலமாக தனது செயல் திறனில் குறைந்தே காணப்படுகிறார். இதனால் சில காலமாக இவருக்கு இந்திய னையில் வாய்ப்பும் கிட்டாமல் இருந்தது. இருப்பினும் இந்திய அணியில் தான் இடம்பெறாத போதும், ஆடும் அணியில் தான் இல்லை என்பதிலும் தனக்கு எந்த கவலையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
ஹிட் மேன் என்று அழைக்கபடும் ரோஹித் சர்மா இந்திய அணியில் பல போட்டிகளில் விளையாடியுள்ளார் மேலும் கிரிக்கெட் உலகில் 2 இரட்டை சதமும் அடித்து சாதனையயும் புரிந்துள்ளார். சில மாதங்களாக இந்திய அணியின் ஆடும் லவனின் இடம்பெறாமல் இருந்தார் இந்த அதிரடி பேட்ஸ்மேன்.
சில நாட்ட்களுக்கு முன்னர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோஹித், அந்த அணியை சிறப்பாக வழிநடத்த தவறினார். இதனால் அந்த அணி மோசமாக செயல்பட்டு பிளே ஆப் சுற்றிற்கு கூட தகுதி பெறாமல் தொடரில் இருந்து வெளியேறியது. இதையடுத்து அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பல்வேறு கேலி கிண்டலுக்கு உள்ளானார்.
சமீபத்தில் ரோஹித் சர்மா அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில் “ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் ஓர் எல்லை இருக்கிறது, அந்த எல்லையில் பாதியை நான் கடந்துவிட்டேன். எனவே, இந்திய அணியில் இடம் பெறுகிறோமா இல்லையா என்பதை பற்றிய கவலை எனக்கு இல்லை. இப்போது எனக்கிருக்கும் மனநிலை என்னவென்றால், வாய்ப்புகள் கிடைக்கும்போது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது மட்டும் தான்” என்று தெரிவித்துள்ளார்.