நான் ஆர்சிபி ரசிகன்.. என்னோட பெயரை அவரை நினைவில் வெச்சுருந்ததே பெரிய விஷயம்.. நிதிஷ் ரெட்டி

Nitish Reddy
- Advertisement -

ஐபிஎல் 2024 தொடரில் நிறைய இளம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிறப்பாக விளையாடி தங்களை வருங்கால நட்சத்திரங்களாக அடையாளப்படுத்தினர். அந்த வகையில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் நிதீஷ் ரெட்டி ஆல் ரவுண்டராக அசத்தலான செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். குறிப்பாக 303 ரன்கள் அடித்த அவர் 3 விக்கெட்டுகளையும் எடுத்து ஹைதராபாத் ஃபைனல் வரை செல்ல தம்முடைய பங்காற்றினார்.

அதனால் 2024 ஐபிஎல் தொடரின் சிறந்த வளரும் வீரர் என்ற விருதையும் வென்ற அவர் கேப்டன் பட் கமின்ஸ் பாராட்டுகளைப் பெற்றார். அதே காரணத்தால் சமீபத்திய ஜிம்பாப்வே டி20 தொடரில் இந்தியாவுக்காக விளையாட அவர் தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் கடைசி நேரத்தில் காயத்தை சந்தித்ததால் அத்தொடரில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்காமல் போனது.

- Advertisement -

ஆர்சிபி ரசிகன்:
இந்நிலையில் விராட் கோலி மற்றும் ஏபி டீ வில்லியர்ஸ் ஆகியோரை தமக்கு மிகவும் பிடிக்கும் என்று நித்தீஷ் ரெட்டி தெரிவித்துள்ளார். அத்துடன் ஹைதராபாத் அணிக்கு வருவதற்கு முன்பு வரை தாம் ஆர்சிபி அணியின் மிகப்பெரிய ரசிகன் என்றும் அவர் கூறியுள்ளார். அதனாலேயே இந்த வருடம் ஆர்சிபி அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி விராட் கோலியின் பாராட்டுகளை பெற முயற்சித்ததாகவும் நித்திஷ் ரெட்டி கூறியுள்ளார்.

இருப்பினும் கடைசியில் கை கொடுத்த விராட் கோலி தம்முடைய பெயரை நினைவில் வைத்திருந்ததே மிகப்பெரிய விஷயம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “விராட் கோலி மற்றும் ஏபி டீ வில்லியர்ஸ் ஆகியோரை நான் உண்மையில் ரசிப்பேன். கடந்த 10 வருடங்களாக நான் ஆர்சிபி அணியின் மிகப்பெரிய ரசிகன். 2023 சீசனில் விராட் கோலியை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது”

- Advertisement -

“அப்போது அவரிடம் கேட்பதற்கு என்னிடம் நிறைய இல்லை. அவரிடம் கை கொடுத்து ஆட்டோகிராப் வாங்குவதற்கு மட்டுமே விரும்பினேன். 2024 சீசனில் ஆர்சிபி அணிக்கு எதிராக நான் சிறப்பாக விளையாட விரும்பினேன். ஏனெனில் அப்போது தான் விராட் கோலி என்னுடைய ஆட்டத்தை கவனிப்பார் என்று நம்பினேன். இருப்பினும் அந்தப் போட்டியில் எனக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கவில்லை”

இதையும் படிங்க: வெறும் 5 ரன்ஸ்.. 4 விக்கெட்ஸ்.. கைமீறிய வெற்றியை நெல்லையிடமிருந்து பறித்த நடராஜன்.. திரில்லரில் மிரட்டிய திருப்பூர்

“அதனால் போட்டியின் முடிவில் நிகழ்ந்த கை கொடுக்கும் நிகழ்வில் அவர் என்னுடைய பெயரை நினைவில் வைத்திருந்தார். அதுவே எனக்கு பெரிய விஷயம்” என்று கூறினார். அந்த வகையில் பல இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாக திகழும் விராட் கோலி தன்னுடைய கடைசி முயற்சியில் 2024 டி20 உலகக் கோப்பை வென்றார். அதனால் ஓய்வு பெறுவதற்குள் அவர் ஐபிஎல் கோப்பையும் வெல்வார் என்ற நம்பிக்கை ஆர்சிபி ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisement