போதும் சாமி எனக்கு இந்தியாவே வேணாம் ஆள விடுங்க – முரளி விஜய் ஆதங்கம், ரசிகர்கள் பதிலடி

murali
- Advertisement -

தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் முரளி விஜய் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் அசத்தியால் கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட அறிமுகமானார். குறிப்பாக ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடி தொடக்க வீரராக தன்னை அடையாளப்படுத்திய அவர் இந்தியாவுக்காக பெற்ற வாய்ப்புகளில் ஒருநாள் கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். ஆனால் அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு தொடர்ந்து சிறப்பாக செயல்பட தவறிய அவர் 61 டெஸ்ட் போட்டிகளில் 3982 ரன்களை 38.29 என்ற சுமாரான சராசரியில் மட்டுமே எடுத்தார்.

muralivijay

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட்டில் அதற்கு மேல் என்பது போல் 17 போட்டிகளில் வெறும் 339 ரன்களை 21.18 என்ற மோசமான சராசரியில் மட்டுமே எடுத்த அவர் மொத்தமாக 12 சதங்களையும் 16 அரை சதங்களையும் அடித்துள்ளார். ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற இளம் வீரர்கள் கிடைக்க துவங்கியதால் கொஞ்சம் கொஞ்சமாக கழற்றி விடப்பட்ட அவர் கடைசியாக கடந்த 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைத்த விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். அதன் பின் ஐபிஎல் தொடரிலும் உள்ளூர் தொடரிலும் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் அளவுக்கு நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்த தவறிய அவர் வெகுதூரம் சென்றார்.

போதும் சாமி:
போதாகுறைக்கு குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில வருடங்களாக உள்ளூர் கிரிக்கெட்டிலும் தமிழகத்துக்காக ரஞ்சிக்கோப்பை போன்ற தொடர்களில் விளையாடாமல் இருந்த அவர் ஒரு வழியாக கடைசியாக கடந்த டிஎன்பிஎல் தொடரில் விளையாடினார். இந்நிலையில் 30 வயதை கடந்த வீரர்களை இந்திய அணி நிர்வாகம் 80 வயதை கடந்த கிழவர்களைப் போல் பார்ப்பதாக தெரிவிக்கும் முரளி விஜய் இனிமேலும் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு தமக்கு கிடைக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

,murali vijay

அதனால் இந்தியாவுக்காக விளையாடும் தமது கனவு முடிந்து விட்டதாக தெரிவிக்கும் அவர் வெளிநாடுகளில் சென்று விளையாட முயற்சிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இது பற்றி முன்னாள் வீரர் டபிள்யூவி ராமன் அவர்களது வாயிலாக அவர் பேசியது பின்வருமாறு. “பிசிசிஐயில் எனது வேலைகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. நான் தற்போது வெளிநாடுகளில் வாய்ப்புகளை எதிர்நோக்கியுள்ளேன். அதற்கு முன்பாக நான் சில முதல் தர கிரிக்கெட்டில் விளையாட விரும்புகிறேன். ஆனால் இந்தியாவில் 30 வயதை தாண்டி விட்டால் அனைவரும் எங்களை தெருவில் நடக்கும் 80 வயது கிழவர்களைப் போல் பார்க்கிறார்கள்”

- Advertisement -

“இதை ஊடகங்கள் தான் வித்தியாசமாக கையாள வேண்டும். ஏனெனில் அனைவருமே 30 வயதில் தான் தங்களது கேரியரின் உச்சத்தை தொடுவார்கள். ஆனால் அவர்கள் இங்கே பெஞ்சில் அமரும் வாய்ப்பைத் தான் பெறுகிறார்கள். அந்த வகையில் என்னால் நான் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும் என்று உணர்ந்தாலும் வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருக்கிறது. அதனால் நான் வெளியில் வாய்ப்புகளை தேடுகிறேன். உண்மையை சொல்ல வேண்டுமெனில் நீங்கள் உங்களது கையில் என்ன இருக்கிறதோ அதை மட்டுமே செய்ய முடியும். உங்களால் கட்டுப்படுத்த முடியாததை கட்டுப்படுத்த முடியாது. நடந்தது நடந்து முடிந்து விட்டது” என்று கூறினார்.

murali viajy

இருப்பினும் பிரிதிவி ஷா, சர்பிராஸ் கான் போன்ற சராசரியாக 23 வயதுடைய இளம் வீரர்கள் ரஞ்சி கோப்பையில் முரட்டுத்தனமாக அடித்து இந்தியாவுக்காக விளையாடுவதற்கு தேர்வு குழுவின் கதவுகளை தொடர்ந்து தட்டிக் கொண்டே இருந்தும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது. ஆனால் 38 வயதை கடந்து விட்ட இவரோ சமீப காலங்களில் உள்ளூர் கிரிக்கெட்டில் கூட விளையாடவில்லை.

இதையும் படிங்க: IND vs SL : 3வது ஒன்டே நடைபெறும் திருவனந்தபுரம் மைதானம் எப்படி? புள்ளிவிவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

அப்படிப்பட்ட நிலையில் இந்தியாவுக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள் என அவரது இந்த கருத்துக்கு தமிழக ரசிகர்களே பதிலடி கொடுக்கிறார்கள். மேலும் நண்பன் தினேஷ் கார்த்திக்க்கு விஷயத்தில் நீங்கள் செய்த செயல்களுக்கு உங்களது இந்த நிலைமை நாங்கள் எதிர்பார்த்த ஒன்று தான் எனவும் ரசிகர்கள் பதிலடி கொடுக்கிறார்கள்.

Advertisement