IND vs SL : 3வது ஒன்டே நடைபெறும் திருவனந்தபுரம் மைதானம் எப்படி? புள்ளிவிவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

GReenField Stadium Ground Kerala
- Advertisement -

இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. குறிப்பாக வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ராகுல் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பார்முக்கு திரும்பி அடுத்தடுத்த வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றியது இந்திய அணிக்கு பலத்தை சேர்க்கும் வகையில் அமைந்து வருகிறது. அதைத் தொடர்ந்து இத்தொடரின் சம்பிரதாயக் கடைசி போட்டி ஜனவரி 15ஆம் தேதியன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.

அதில் ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டதால் இஷான் கிசான், சூரியகுமார் போன்ற சில முக்கிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நல்ல பார்மில் அவர்களுடன் இதர இந்திய அணியினரும் சிறப்பாக செயல்பட்டு இத்தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட் வாஷ் வெற்றியுடன் கோப்பையை வெல்ல போராட உள்ளனர். மறுபுறம் ஏற்கனவே தொடரை இழந்த இலங்கை கடைசி போட்டியிலாவது வென்று ஆறுதல் வெற்றியுடன் வைட்வாஷ் தோல்வியை போராட உள்ளது. அதனால் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படும் இப்போட்டி திருவனந்தபுரத்தில் இருக்கும் கிரீன் பீல்ட் கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 1.30 மணிக்கு நடைபெறுகிறது.

- Advertisement -

க்ரீன்பீல்ட் மைதானம்:
கடந்த 2015இல் தோற்றுவிக்கப்பட்டு 2017 முதல் சர்வதேச போட்டிகளை நடத்தி வரும் இமைதானம் 55,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இங்கு வரலாற்றில் முதல் முறையாக கடந்த 2018ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் களமிறங்கிய இந்தியா பந்து வீச்சில் அசத்தலாக செயல்பட்டு வெறும் 104 ரன்களுக்கு சுருட்டி பின்னர் 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றிலை பெற்றது.

அப்போட்டியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். பேட்டிங்கில் ரோஹித் சர்மா 63* ரன்களும் விராட் கோலி 33* ரன்களும் எடுத்து எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதன் பின் இப்போது தான் 5 வருடங்கள் கழித்து 2வது முறையாக ஒருநாள் போட்டி நடைபெறுகிறது என்பதால் மேற்கொண்டு பார்ப்பதற்கு புள்ளி விவரங்கள் இல்லை.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:
க்ரீன்பீல்ட் மைதானத்தில் வரலாற்றில் இதுவரை நடைபெற்ற அனைத்து சர்வதேச போட்டிகளிலுமே பேட்ஸ்மேன்கள் திண்டாடிய நிலையில் பவுலர்கள் ஆதிக்கத்தை செலுத்தினார்கள். எனவே பந்து வீச்சாளர்களுக்கு அதிகமாக கைகொடுத்து வரும் இம்மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் மிகவும் கவனத்துடன் நிலையாக நின்று விளையாடினால் மட்டுமே ஓரளவு பெரிய ரன்களை அடிக்க முடியும். குறிப்பாக 2018இல் பவுலிங்க்கு சாதகமான பிட்ச் இருந்தது வென்று நினைத்தால் கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம் தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இங்கு நடைபெற்றது.

அதில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா இந்தியாவின் தரமான பந்து வீச்சில் ஆரம்பத்திலேயே விக்கெட்களை இழந்து 4/8 என தடுமாறி பின்னர் 106/8 ரன்கள் எடுத்தது. அதை துரத்தி வெற்றி பெறுவதற்கு இந்தியா 17 ஓவர்கள் எடுத்துக் கொண்டது. 3 விக்கெட்களை எடுத்த அர்ஷிதீப் சிங் ஆட்டநாயக்கன் விருதை வென்றார். மொத்தத்தில் இப்போட்டியிலும் வேகப்பந்து வீச்சாளர்களும் ஸ்பின்னர்களும் இங்கு பெரிய ஆதிக்கத்தை செலுத்துவார்கள் என நம்பலாம்.

- Advertisement -

இருப்பினும் இம்மைதானத்தின் பவுண்டரிகளின் அளவு மிகவும் சிறியது இருப்பதை பயன்படுத்தி திறமையான பேட்ஸ்மேன்கள் செட்டிலாகி நல்ல ரன்களையும் குவிக்கலாம். மேலும் இது பகலிரவு போட்டியாக நடைபெறுவதால் பனியின் தாக்கத்தை கருதி டாஸ் வெல்லும் கேப்டன்கள் முதலில் பந்து வீசத் தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

இதையும் படிங்க: அவசர அவசரமாக பிளைட் பிடிச்சி பெங்களூரு வந்த கோச் டிராவிட். நாளைக்கு மேட்ச் இருக்கு – இப்போ என்ன ஆச்சி?

வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் நாளன்று திருவனந்தபுரத்தை சுற்றிய பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு இல்லை என்றும் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும் என இந்திய வானிலை மையம் தெரிவிப்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

Advertisement