ஹைதராபாத் மைதானத்திலும் கெத்து காட்டிய ரோஹித் ரசிகர்கள்.. அசிங்கப்பட்ட பாண்டியா – நடந்தது என்ன?

Rohit
- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகமானது நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக புதிய கேப்டனாக ஹார்திக் பாண்டியாவை அறிவித்தது. குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து டிரேடிங் முறையில் பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட பாண்டியா நேரடியாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார்.

அப்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம் ஹார்டிக் பாண்டியாவை புதிய கேப்டனாக அறிவித்ததில் இருந்தே ரோகித் சர்மாவின் ரசிகர்கள் சமூக வலைதளத்தின் மூலம் வெளிப்படையாகவே தங்களது அதிருப்தியை தெரிவித்து இருந்தனர்.

- Advertisement -

அதோடு ரோகித் சர்மாவிற்கு ஆதரவாக இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் சமூகவலைதள பக்கத்தில் இருந்தும் அந்த அணியை தொடர்ச்சியாக புறக்கணித்து வந்தனர். இதுகுறித்து பல்வேறு விவாதங்கள் தினந்தோறும் நடந்து கொண்டே தான் வருகின்றன.

அதேபோன்று புதிய கேப்டனான ஹர்திக் பாண்டியாவை செல்லும் இடமெல்லாம் ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். குறிப்பாக அகமதாபாத் நகரில் நடைபெற்ற போட்டியின் போது ரோஹித்திற்கு ஆதரவாக ரசிகர்கள் “மும்பை கா ராஜா ரோகித் சர்மா” என்று முழக்கமிட்டு அவருக்கு ஆதரவை அளித்தது சமூக வலைதளத்தில் பெரியளவு கவனத்தை ஈர்த்திருந்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்று முடிந்த இரண்டாவது போட்டியிலும் ஹர்திக் பாண்டியாவை அசிங்கப்படுத்தும் வகையில் ரோகித் சர்மாவின் ரசிகர்கள் “மும்பை கா ராஜா ரோகித் சர்மா” என்று முழக்கமிட்டுக் கொண்டே இருந்தனர். போட்டி ஆரம்பமாவதற்கு முன்னதாக மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவரை ஆதரித்து ரசிகர்கள் இப்படி முழக்கமிட்டனர்.

இதையும் படிங்க : டாஸ் போடும் போது இப்படி நடக்கும்னு எதிர்பாக்கவே இல்ல.. மோசமான தோல்விக்கு பின்னர் – ஹார்டிக் பாண்டியா வருத்தம்

அதேபோன்று பாண்டியா பீல்டிங் செய்யும் வரும்போது பவுண்டரி லைனுக்கு அருகில் இருக்கும் ரசிகர்கள் அவரை திட்டியும் தொடர்ச்சியாக முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். இப்படி ஒரு பக்கம் காரசாரமான நிகழ்வுகள் போட்டியின்போது நடைபெற்று வரும் வேளையில் முதல் இரண்டு போட்டியிலுமே மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement