டாஸ் போடும் போது இப்படி நடக்கும்னு எதிர்பாக்கவே இல்ல.. மோசமான தோல்விக்கு பின்னர் – ஹார்டிக் பாண்டியா வருத்தம்

Hardik-Pandya
- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் பொறுப்பை ஏற்றதிலிருந்து ஹார்டிக் பாண்டியாவின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்து வந்த வேளையில் ஏற்கனவே குஜராத் அணிக்கு எதிரான வெற்றி பெற வேண்டிய முதல் போட்டியில் மும்பை அணி தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது. அதனைத்தொடர்ந்து நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் தோல்வியை சந்தித்தது மீண்டும் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அந்த வகையில் நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்று முடிந்த நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எட்டாவது லீக் ஆட்டத்தில் சன்ரைசஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கி 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்களை குவித்தது. பின்னர் 278 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இமாலய இலக்குடன் இலக்கினை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணியானது இறுதிவரை போராடியும் 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 246 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.

இதன் காரணமாக சன்ரைசஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வி குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்டிக் பாண்டியா கூறுகையில் : இந்த போட்டிக்கான டாஸ் போடும்போது சன்ரைசர்ஸ் அணி 277 ரன்களை அடிக்கும் என்றெல்லாம் நான் நினைத்து பார்க்கவில்லை. இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது.

- Advertisement -

அதனால் நாங்கள் சிறப்பாக பந்து வீசினோமா அல்லது மோசமாக பந்து வீசினோமா என்று கூற முடியாது. எதிரணி நன்றாக பேட்டிங் செய்து விட்டது அதை மட்டும் தான் சொல்ல முடியும். அதே போன்று இந்த போட்டியில் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததாலே 500 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாங்கள் ஒரு சில விடயத்தில் இந்த போட்டியில் கோட்டை விட்டதை உணர்ந்துள்ளோம்.

இதையும் படிங்க : மும்பை இந்தியன்ஸ் அணியின் மிக மோசமான கேப்டனாக மட்டமான சாதனையை நிகழ்த்திய – ஹார்டிக் பாண்டியா

பந்துவீச்சில் இளம் வீரர்களைக் கொண்ட அணியாக இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. நிறைய முறை பந்து பவுண்டரி லைனுக்கு சென்றதால் பவுலிங் செய்ய நேரம் எடுத்துக் கொண்டது. இது போன்ற போட்டிகளில் இருந்து நல்ல பாடங்களை கற்றுக் கொள்ள முடியும். மபாகா முதல் போட்டியில் விளையாடியுள்ளார். எனவே அவர் மீது பெரிய அழுத்தத்தை அளிக்க வேண்டாம். நிச்சயம் அவருக்கு நல்ல நேரம் வரும் என பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement