மும்பை இந்தியன்ஸ் அணியின் மிக மோசமான கேப்டனாக மட்டமான சாதனையை நிகழ்த்திய – ஹார்டிக் பாண்டியா

Pandya
- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 8-வது லீக் போட்டியானது விறுவிறுப்பாக நடைபெற்று இறுதியில் ஒரு மிகச்சிறந்த போட்டியாக முடிவடைந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சன் ரைசர்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற மும்பை அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி துவக்கத்திலிருந்தே அதிரடியில் வெளுத்து வாங்க சன்ரைசர்ஸ் அணி சார்பாக களமிறங்கிய வீரர்கள் அனைவருமே பவுண்டரியும், சிக்ஸர்களுமாக பறக்க விட்டனர்.

- Advertisement -

இதன் காரணமாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த அந்த அணி 277 என்கிற இமாலய ரன் குவிப்பை வழங்கியது. சன்ரைசர்ஸ் அணி சார்பாக டிராவிஸ் ஹெட் 62 ரன்கள், அபிஷேக் ஷர்மா 63 ரன்கள், கிளாஸன் 80 ரன்களையும் குவித்து அசத்தினர்.

பின்னர் 278 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது சிறப்பான போராட்டத்தை அளித்து 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 246 ரன்களை குறித்தது. இதன் காரணமாக சன்ரைசர்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மும்பை அணி சார்பாக திலக் வர்மா 64 ரன்களையும், டிம் டேவிட் 42 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த தொடரில் தொடர்ச்சியாக தங்களது இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது. அதே வேளையில் முதல் போட்டியில் வெற்றிக்கு அருகில் வரை வந்து கோட்டை விட்ட சன்ரைசர்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் பங்கேற்று விளையாடியதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் மோசமான கேப்டன் என்ற சாதனையை ஹார்டிக் பாண்டியா நிகழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : 17 வயது பச்சை மண்ணை சூறையாடிய ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள்.. மோசமான சாதனை படைத்த மும்பை வீரர்

ஏனெனில் இதற்கு முன்னதாக மும்பை அணியின் கேப்டனாக இருந்த எந்த ஒரு வீரருக்கும் கீழ் 250 ரன்களுக்கு மேல் அடிக்கப்படவில்லை. முதல் முறையாக பாண்டியாவின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தான் தற்போது 277 என்கிற அதிகபட்ச ரன்களை மும்பை விட்டுக் கொடுத்துள்ளது. இதன் மூலம் அவர் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த மும்பை கேப்டன் என்ற மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement