இவர் ஒருவர் பவுலிங்கில் அனைத்து அணிகளும் கலங்கி நின்றது. ஆனால் தோனி ஒருவர் மட்டும் அடித்தார் – மைக்கல் ஹஸ்ஸி புகழாரம்

Hussey
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை 12 ஐபிஎல் சீசன் முடிவடைந்த நிலையில் தற்போது 13 ஆவது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 29ம் தேதி துவங்க இருந்தது. ஆனால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு காரணமாக இத்தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஓய்வு காரணமாக பல முன்னாள் வீரர்களும் கிரிக்கெட் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றார்.

- Advertisement -

அந்த வகையில் சென்னை அணியில் விளையாடிய மைக்கேல் ஹஸ்ஸி தனது கருத்தினை பகிர்ந்துள்ளார். அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதன்மை வீரரும், தற்போதைய பேட்டிங் பயிற்சியாளராக இருக்கும் மைக்கேல் ஹஸ்ஸி தோனி உடனான தனது அனுபவங்களை பதிந்துள்ளார். அத்துடன் தோனி தன்னை விட சிறந்த கணிப்பாளர் என்றும் அவரிடம் இருக்கும் திறமை தன்னிடம் இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

தோனி ஒரு முறை விளையாடியது கண்டு அவர் மிரண்டுபோன நிகழ்வு குறித்து தற்போது பேசியுள்ள அவர் இதுகுறித்து அவர் கூறுகையில் : 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் அரையிறுதிப் போட்டியில் சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக விளையாட இருந்தது. அப்போது அனைத்து அணிகளும் ரசித் கான் பந்துவீச்சால் கலங்கி இருந்ததாகவும், அவரது பந்து வீச்சில் இருக்கும் புதிய சூழல்திறனை பேட்ஸ்மேன்களை வீழ்த்துவதுமாக இருந்ததை குறிப்பிட்டுள்ளார்.

Dhoni

இது தொடர்பாக பேட்டிங் ஆலோசனைகளை சொல்லலாமா வேண்டாமா என்று குழம்பி இருந்த ஹஸ்ஸி இறுதியில் பேட்டிங் பயிற்சியாளர் என்ற முறையில் ஒரு குறிப்பினை எழுதி வைத்து அதனை தெரிவித்துள்ளார். அதைப் படித்துவிட்டு தென்ஆப்பிரிக்கா வீரர் டு பிளிசிஸ் பயனுள்ள தகவல் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

ஆனால் அந்த அரையிறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடுமாறிய போது இரண்டாவது பேட்டிங்கில் 140 ரன்கள் அடிக்க வேண்டி நிலையில் 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த போது தடுமாறியதாகவும் அப்போது ரசித்கானை தோனி அதிரடியாக விளையாடி பவுண்டரிக்கு விரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

dhoni

தோனியின் அந்த திறமையை கண்டு தான் வியந்ததாக அவர் கூறியுள்ளார். அப்போது தோனி நேராக தன்னைப் பார்த்து நான் எனது ஸ்டைலிலேயே விளையாடுகிறேன் நன்றி என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் எழுதிய குறிப்பையும் தாண்டி தனக்கென ஒரு தனி ஸ்டைல் இருப்பதை தோனி அதில் நிரூபித்து என்னை வியக்கவைத்தார் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement