அதுல தடுமாறி மண்டையில் அடி வாங்குன காலம் மலையேறிடுச்சு.. இந்தியா அசராது.. ஆஸிக்கு அஸ்வின் சவால்

R Ashwin
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 2024 பார்டர் – காவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் மாதம் 22ஆம் தேதி துவங்க உள்ளது. 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்திய முதல் ஆசிய அணியாக வரலாறு படைத்த இந்தியா இம்முறையும் வென்று ஹாட்ரிக் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் இம்முறை இந்தியாவை ஆரம்பத்திலேயே அடக்குவதற்காக அதிகப்படியான வேகம், பவுன்ஸ் இருக்கக்கூடிய பெர்த் மைதானத்தில் முதல் போட்டி நடைபெறும் என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. அந்த மைதானத்தில் (ஆப்டஸ்) ஆஸ்திரேலியா இதுவரை டெஸ்ட் போட்டியில் தோற்றதில்லை. இந்நிலையில் இம்முறை ஸ்டீவ் ஸ்மித் துவக்க வீரராக வந்தாலும் பெர்த் மைதானத்தில் முதல் போட்டி நடந்தாலும் இந்தியா கவலைப்படாது என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அஸ்வின் நம்பிக்கை:
ஏனெனில் இளம் வீரர்களைக் கொண்ட இந்தியா தற்போது வேகமான பவுன்ஸ் பந்துகளை எதிர்கொள்வதில் பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளதாக அஸ்வின் கூறியுள்ளார். எனவே இம்முறையும் ஆஸ்திரேலிய மண்ணில் ஹாட்ரிக் பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “பெர்த்தில் முதல் நாளில் பிட்ச் மெதுவாக இருக்கும். அதனாலேயே அங்கு ஆஸ்திரேலியா டாஸ் வென்று அனைத்து நேரமும் முதலில் பேட்டிங் செய்கிறது”

“ஆனால் தற்போது மக்கள் வேகத்துக்கு எதிராக தடுமாறுவதில்லை. குறிப்பாக இம்முறை வேகத்துக்கு எதிராக தடுமாறக்கூடிய அணியாக இந்தியா இருப்பதை உங்களால் கண்டறிய முடியாது. அவர்கள் ஹெல்மெட்டில் சில அடி வாங்கலாம். இருப்பினும் கடந்த சில தசாப்தங்களாக தலையில் அடி வாங்கினாலும் அதை எதிர்கொள்ளும் வீரர்கள் எங்கள் அணியில் வந்துள்ளதை நான் பார்த்துள்ளேன். அதனாலயே இந்தியா வெளிநாடுகளில் நல்ல முடிவுகளையும் கொடுத்து வருகிறது”

- Advertisement -

“சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக செஞ்சூரியனில் நாங்கள் அரை அனுபவம் கொண்ட அணியுடன் விளையாடினோம். அங்கே முதல் போட்டியில் தோற்றாலும் இரண்டாவது போட்டியில் வென்றோம். அதுவே நாங்கள் பின்னங்கால் வைக்காமல் இருப்பதற்கான திறமை மற்றும் தன்னம்பிக்கையாகும். மிகவும் கடினமான கிரிக்கெட்டை விளையாடக்கூடிய ஆஸ்திரேலியா இம்முறை எங்களை வீழ்த்த காத்திருப்பார்கள் என்பதை அறிவோம். மைதானத்தை நிரப்பும் ரசிகர்களைக் கொண்ட ஆஸ்திரேலியாவில் விளையாடும் அனைத்து தொடரும் ஆவலாக இருக்கும்”

இதையும் படிங்க: சூர்யகுமார் கம்பேக்கில் ட்விஸ்ட் வைக்கும் பிசிசியை.. இந்தியாவின் நலன் கருதி முக்கிய முடிவு.. மும்பைக்கு பின்னடைவு

“இம்முறை வார்னருக்கு பதிலாக ஸ்மித் ஓப்பனிங்கில் களமிறங்குவது போல பேட்டிங் வரிசையில் சில மாற்றம் உள்ளது. ஆஸ்திரேலியாவிடம் கடந்த தசாப்தம் முழுவதும் அசத்தி வரும் நேதன் லயனுடன் 3 தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஆனால் எங்கள் அணியில் சற்று அனுபவமின்மை இருக்கிறது. ஆனால் வேகத்தை எதிர்கொள்வதற்கான வீரர்கள் எங்களிடம் வந்துள்ளதாக நினைக்கிறேன். பிட்ச்கள் பச்சையாக இல்லையென்றால் இது ரன் மழை பொழியக்கூடிய தொடராக இருக்கலாம்” என்று கூறினார்.

Advertisement