தன்னுடைய சர்வதேச கரியரில் கோலி எத்தனை முறை 90 ரன்களை தாண்டி சதமடிக்காமல் – ஆட்டமிழந்திருக்கார் தெரியுமா?

Kohli
- Advertisement -

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற இந்திய அணியானது கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஐந்தாவது லீக் போட்டியில் பங்கேற்று விளையாடியது.

அந்த போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 273 ரன்களை குவிக்க பின்னர் 274 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கினை துரத்தியபோது இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி தனது அற்புதமான பங்களிப்பை வழங்கியிருந்தார்.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியின் போது 104 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 8 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 95 ரன்கள் குவித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதியில் சதம் அடிக்க முடியாமல் வெளியேறி இருந்தார். அவரது இந்த அற்புதமான ஆட்டம் காரணமாக இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.

ஏற்கனவே பங்களாதேஷ் அணிக்கு எதிராக இதேபோன்று இலக்கை துரத்திய வேளையில் கடைசி நேரத்தில் சிக்ஸ் அடித்து போட்டியை வெற்றியோடு முடித்தது மட்டுமின்றி சதம் கடந்த விராத் கோலி நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் சிக்ஸர் அடித்து சதத்துடன் வெற்றியை பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 95 ரன்கள் அவர் ஆட்டம் இழந்தது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் 34 வயதான இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் எத்தனை முறை 90 ரன்கள் மற்றும் அதற்கு மேல் அடித்து சதம் அடிக்காமல் ஆட்டம் இழந்திருக்கிறார் என்பது குறித்து தகவலை இங்கு காணலாம். அந்த வகையில் விராட் கோலி 8 முறை 90 ரன்களுக்கு மேல் அடித்து சதத்தை தவற விட்டுள்ளார். அதில் ஒருநாள் போட்டிகளில் 6 முறையும், டெஸ்ட் போட்டிகளில் 2 முறையும் அவர் சதத்தை தவற விட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பாகிஸ்தான் எப்போது அதிகாரப்பூர்வமாக வெளியேறும்.. செமி ஃபைனல் செல்ல வாய்ப்பிருக்கா? கால்குலேட்டர் முடிவுகள்

இந்த உலகக் கோப்பை தொடரை பொருத்தவரை 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் ஒரு சதம் மற்றும் 3 அரை சதங்கள் என 354 ரன்கள் குவித்து அசத்தலான பார்மில் இருக்கிறார். அதோடு இன்னும் ஒரு சதம் அவர் இந்த தொடரில் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த சச்சின் டெண்டுல்கரின் 49 சத சாதனையை சமன் செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement