
ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியானது தற்போது இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கு நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதலாவது போட்டி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியிடம் இன்னிங்ஸ் வித்யாசத்தில் தோல்வியை சந்தித்திருந்தது.
அப்படி முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்ததால் தற்போது பூஜ்ஜியத்திற்கு ஒன்று (0-1) என்ற கணக்கில் பின்தங்கி இருக்கும் அந்த அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணியால் இந்த தொடரை சமன் செய்ய முடியும். ஆனால் இந்த போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை நோக்கியே நகர்ந்து வருகிறது. ஏனெனில் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 518 ரன்கள் என்கிற மாபெரும் ரன் குவிப்பை வழங்கியிருந்தது.
அதனை தொடர்ந்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேரம் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதன் காரணமாக 378 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் நாளைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் விளையாட இருக்கிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் அவர்கள் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க வேண்டுமெனில் பாலோ ஆனை கடக்க வேண்டும். ஒருவேளை அவர்கள் பாலோ ஆன் ஆனால் நிச்சயம் மீண்டும் இன்னிங்ஸ் தோல்வி அடைந்துவிடும். அதனால் அதை தவிர்ப்பதற்கு எத்தனை ரன்கள் வேண்டும்? என்பது குறித்த தகவலை இங்கே வழங்கியுள்ளோம்.
இதையும் படிங்க : இந்தியாவின் அபிஷேக்கை 3 பந்தில் அவுட்டாக்குவேன்.. என்னங்க பெரிய நம்பர் ஒன் பேட்ஸ்மேன்.. பாக் வீரர் சவால்
அந்த வகையில் தற்போது 140 ரன்கள் அடித்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி கூடுதலாக 179 ரன்கள் அடித்தால் 319 ரன்கள் அடித்து பாலானை தவிர்க்க முடியும். அப்படி 319 ரன்களுக்குள் ஆட்டமிழந்து விட்டால் நிச்சயம் இம்முறையும் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்கும் என்பது உறுதி.