ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 9வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அத்தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையில் ஆரம்பம் முதலே அசத்திய இந்தியா தோல்வியே சந்திக்காமல் கோப்பையை வென்றது. குறிப்பாக பரம எதிரி பாகிஸ்தானை எதிர்கொண்ட 3 போட்டிகளிலும் வென்ற இந்தியா தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்தது.
அத்துடன் 2021க்குப்பின் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய 8 போட்டிகளிலும் இந்தியா 8 வெற்றிகளைப் பெற்று மாஸ் காட்டியுள்ளது. மறுபுறம் இந்தியாவை எப்படியாவது தோற்கடித்து பழி தீர்க்க வேண்டும் என்ற கனவுடன் பாகிஸ்தான் களமிறங்கியது. ஆனால் அதற்காக வாயில் சவால் விட்ட பாகிஸ்தான் அணி களத்தில் சுமாராக விளையாடி அவமானத் தோல்வியை சந்தித்து வெளியேறியது.
அபிஷேக்கை 3 பந்தில் முடிப்பேன்:
முன்னதாக ஐசிசி டி20 தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலிக்கும் அபிஷேக் ஷர்மா அத்தொடரில் எதிரணிகளை அடித்து நொறுக்கி அதிக ரன்கள் குவித்தார். குறிப்பாக பாகிஸ்தானை லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் பந்தாடிய அவர் இந்தியாவை எளிதாக வெற்றி பெற வைத்தார். எனவே இறுதிப் போட்டியில் அவரை ஆரம்பத்திலேயே பாகிஸ்தான் அவுட்டாக்கினால் இந்தியா மண்ணை கவ்வும் என்று சோயப் அக்தர் போன்ற முன்னாள் வீரர்கள் கணித்தனர்.
அதே போல இறுதிப்போட்டியில் அபிஷேக் சர்மா, கில், கேப்டன் சூரியகுமார் ஆரம்பத்திலேயே அவுட்டானதால் 20/3 என இந்தியா திணறியது. அப்போது நங்கூரமாக விளையாடிய திலக் வர்மா 69* ரன்கள் அடித்து இந்தியாவை தூக்கி நிறுத்தினார். அவருடன் சிவம் துபே, சஞ்சு சாம்சன் ஆகியோரும் முக்கிய ரன்கள் குவித்து இந்தியாவை தலைகுனிய விடாமல் வெற்றி பெற வைத்தனர்.
பாகிஸ்தான் வீரர் சவால்:
அப்படி அபிஷேக் ஷர்மாவை அவுட்டாக்கியும் இந்தியாவை தோற்கடிக்க முடியாததால் பாகிஸ்தான் ரசிகர்கள் சோகத்தில் அடைந்தனர். இந்நிலையில் அபிஷேக் ஷர்மாவை தாம் 3 பந்துகளில் அவுட்டாக்குவேன் என்று பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் இக்சனுல்லா சவால் விடுத்துள்ளார். இது பற்றி ட்விட்டர் பக்கத்தில் வைரல் வீடியோவில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு.
இதையும் படிங்க: எனக்கும் அந்த கனவு இருக்கு.. சான்ஸ் கொடுத்தா இந்தியாவை ஜெய்க்க வைப்பேன்.. ஜடேஜா சிக்னல் பேட்டி
“அபிஷேக் ஷர்மாவால் எனக்கு எதிராக தாக்குப் பிடிக்க முடியாது. எனக்கு வாய்பு கிடைத்தால் அவரை நான் 3 பந்துகளில் அவுட்டாக்குவேன். 6 பந்துக்கு மேலே அவரை விடமாட்டேன்” என்று கூறியுள்ளார். அதாவது “என்னங்க பெரிய நம்பர் ஒன் பேட்ஸ்மேன், அபிஷேக் சர்மாவை 3 பந்தில் முடித்து காட்டுவேன்” என்று இக்சனுல்லா சவால் விடுத்துள்ளார். ஆனால் பாகிஸ்தான் அணியில் தற்சமயத்தில் விளையாட முடியாத அளவுக்கு கிரிக்கெட்டில் தடுமாறும் அவரை 2025 பிஎஸ்எல் தொடரில் எந்த அணியும் வாங்காதது குறிப்பிடத்தக்கது.



