ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மெல்ல மெல்ல வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது. இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் வரிசையாக தோல்வியை சந்தித்த சி.எஸ்.கே அணி அதன்பின்னர் அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. அதனால் முதல் 5 போட்டிகளில் முடிவில் 2 வெற்றிகளை மட்டுமே பெற்று பின்னடைவை சந்தித்திருந்தது.
சி.எஸ்.கே அணியின் பிளே ஆப் வாய்ப்பு :
பின்னர் மீண்டும் இரண்டு தோல்விகளை சந்தித்து முதல் 8 போட்டிகளில் 3 வெற்றிகளை மட்டுமே பெற்று மிகப்பெரிய சரிவை சந்தித்து இருந்தது. ஆனால் கடைசியாக விளையாடிய மூன்று போட்டியிலும் வெற்றி பெற்று தற்போது 11 போட்டிகளில் 6 வெற்றிகள் உடன் 12 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளது.
நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்தி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 208 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தற்போது சி.எஸ்.கே அணியின் பிளே ஆப் வாய்ப்பும் மீண்டும் உயிர் பெற்றுள்ளது.
இந்நிலையில் தற்போது 11 ஆட்டங்களில் விளையாடி முடித்துள்ள சி.எஸ்.கே அணி பிளே ஆப் சுற்று தகுதிபெற வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்த தகவலை இங்கு காணலாம். அந்த வகையில் எஞ்சியுள்ள 3 போட்டிகளும் சென்னை அணி வெற்றி பெறும் பட்சத்தில் 16 புள்ளிகளுடன் பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்துவிடும். அதேவேளையில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு தோல்வியை சந்தித்தால் மற்ற போட்டிகளின் முடிவை நாட வேண்டியிருக்கும்.
இதையும் படிங்க : ப்ளீஸ் புவனேஷ்வர் குமாருக்கு இந்த வாய்ப்பை தாங்க.. ஆதரவு தெரிவித்து பேசிய – ரவிச்சந்திரன் அஷ்வின்
அதேவேளையில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றால் மற்ற அணிகளின் ரன் ரேட்டை பார்க்க வேண்டிய சூழல் வரும். அப்படி ஒரு வெற்றியை மட்டும் பெற்றால் சென்னை அணியின் பிளே ஆப் வாய்ப்பு கடினம் கடினமான மாறும். எந்த பிரச்னையும் இல்லாமல் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற 3 போட்டியிலும் வெற்றி பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



