40 வயதிலும் என்னம்மா மின்னல்வேகத்தில் ஓடுறாரு – தோனியை ஆச்சர்யத்துடன் பாராட்டிய வெளிநாட்டு நட்சத்திரம்

MS Dhoni Finisher
Advertisement

ஐபிஎல் 2022 நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை பங்கேற்ற 12 போட்டிகளில் 8 தோல்விகளை பதிவு செய்துள்ளதால் ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்றுடன் வெளியேறி சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் வாய்ப்பை பறிகொடுத்துள்ளது. அந்த அணிக்கு 4 கோப்பைகளை வென்று கொடுத்து 2-வது வெற்றிகரமான ஐபிஎல் அணியாகவும் ஜொலிக்க வைத்த கேப்டன் எம்எஸ் தோனி இந்த வருடம் தொடர் துவங்க ஒருசில நாட்கள் முன்பாக 40 வயதைக் கடந்து விட்ட காரணத்தால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு கேப்டன் பதவியை ரவிந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார்.

MS Dhoni vs MI

மறுபுறம் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஜடேஜா தலைமையில் 4 தொடர் தோல்விகளை பெற்ற சென்னை ஆரம்பத்திலேயே பிளே ஆப் சுற்று வாய்ப்பை 90% பறிகொடுத்தது. அத்துடன் கேப்டன்ஷிப் அழுத்தம் தனது ஆட்டத்தை பாதித்ததாக உணர்ந்ததாக ஜடேஜா மீண்டும் அந்த பொறுப்பை தோனியிடமே வழங்கினார். அதன்பின் கேப்டனாக தோனி திரும்பியதும் ஒருசில பெரிய வெற்றிகளைப் பெற்ற சென்னை கடைசி 3 போட்டிகளில் வென்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல 3% வாய்ப்பில் இருந்தது.

- Advertisement -

தனிஒருவன் தோனி:
அந்த நிலைமையில் பரம எதிரியான மும்பைக்கு எதிராக கடைசியாக வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முக்கியமான போட்டியில் அந்த அணியின் அதிரடியான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாத சென்னை பேட்ஸ்மேன்கள் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பினார்கள். அதனால் 29/5 என்று திணறிய அந்த அணி 50 ரன்களை கூட தாண்டாது என எதிர்பார்க்கப்பட்ட போது சென்னையின் இதயக்கனியான எம்எஸ் தோனி தனி ஒருவனை போல 36* (33) ரன்களை அடித்து ஓரளவு மானத்தை காப்பாற்றிய போதிலும் இதர வீரர்கள் கைகொடுக்க தவறியதால் 16 ஓவரில் 97 ரன்களுக்கு சுருண்டது.

MS Dhoni vs MI

அதை துரத்திய மும்பைக்கு சென்னை பவுலர்கள் கடும் நெருக்கடி அளித்த போதிலும் 14.5 ஓவரில் 103/5 ரன்களை எடுத்த மும்பை 12 போட்டிகளில் 3-வது வெற்றியை பதிவு செய்து ஆறுதலடைந்தது. மறுபுறம் பேட்டிங்கில் சொதப்பிய சென்னை 2020க்கு பின் மீண்டும் வரலாற்றில் 2-வது முறையாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் அதிகாரபூர்வமாக வெளியேறியது.

- Advertisement -

40 வயதிலும் தல:
பேட்டிங்க்கு சவாலான பிட்ச்சில் இரு அணிகளைச் சேர்ந்த பேட்ஸ்மேன்களுமே திணறிய போது நேற்றைய போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் (36*) அடித்த பேட்ஸ்மேனாக 40 வயதிலும் சொல்லி அடித்த தோனி அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளில் பேட்டிங் செய்யதில் கில்லாடி என மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார். கடந்த 2020, 2021 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஒரு அரைசதம் கூட அடிக்க முடியாமல் மோசமான பார்மில் திண்டாடி வந்த அவரை அனைவரும் முடிந்துபோன பினிஷர் என்று கிண்டலடித்தனர்.

MS Dhoni 16

ஆனால் இந்த வருடத்தின் முதல் போட்டியிலேயே 62/5 என சென்னை தவித்தபோது அதிரடியாக 50* (38) ரன்கள் குவித்து பார்முக்கு திரும்பிய அவர் மும்பைக்கு எதிரான முந்தைய போட்டியில் கடைசி ஓவரில் 16 ரன்கள் குவித்து தனி ஒருவனாக வெற்றியைப் பெற்றுக் கொடுத்து என்றுமே மகத்தான பினிஷர் என்று தன்னை நிரூபித்தார். இருப்பினும் தற்போது 40 வயதைக் கடந்து விட்டதால் அடுத்த வருடம் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா, இந்த வயதில் அவரால் முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

வியக்கும் ஹெய்டன்:
இந்நிலையில் இந்த வயதிலும் மின்னல் வேகத்தில் ஓடும் தோனியை பார்த்து அவருடன் ஆரம்ப காலத்தில் விளையாடிய ஆஸ்திரேலியாவின் நட்சத்திரம் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் வியந்து பாராட்டியுள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “என் அன்பே ! அவர் விக்கெட்களுக்கிடையே (2 ரன்கள் எடுக்கும்போது) எவ்வளவு வேகமாக ஓடுகிறார். இவர் தனது வயதையும் தாண்டி ஒரு இளமையான வீரர் எந்தளவுக்கு போட்டி போடுவாரோ அதே அளவுக்கு செயல்படுகிறார். இது அவருக்கு நல்லது. இந்த நிலையில் அவர் தொடர்ந்து விளையாட விரும்பினால் நிச்சயமாக முடியும்” என்று கூறினார்.

hayden1

நிறைய இளம் வீரர்கள் கூட 2 ரன்கள் எடுக்க வேகமாக ஓடும்போது தடுமாறும் நிலையில் 40 வயதிலும் அசுர வேகத்தில் ஓடும் தோனி அடுத்த வருடம் விளையாட நினைத்தால் தாராளாமாக விளையாடலாம் என்று ஹெய்டன் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவை சோதித்து பார்த்த முயற்சி தோல்வியடைந்த நிலையில் வேறு கேப்டனும் இல்லாத நிலையில் அடுத்த வருடம் தாராளமாக அவர் சென்னையின் கேப்டனாக விளையாடலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : நீயும் போகக்கூடாது! பிளே ஆஃப் பந்தயத்தில் சென்னையை வாரிய மும்பை – ஆனாலும் சென்னைதான் கெத்து

இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “கேப்டன்ஷிப் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது உங்களிடம் தோனி இருக்கிறார். அணியில் ஒருவரை நீங்கள் தேர்வு செய்ய உறுதியாக இருக்க வேண்டும். அதன் பின்புதான் இதர அணியை தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த வகையில் அந்த நம்பிக்கையை தோனி கொண்டு வருகிறார். அந்த விஷயத்தில் நான் அவரை மிகவும் விரும்புகிறேன்” என்று கூறினார்.

Advertisement