பொல்லார்டை வம்பிழுத்த ஆகாஷ் சோப்ரா. திருப்பி பதிலடி கொடுத்த கைரன் பொல்லார்ட் – அவரின் ரிப்ளை இதோ

Aakash Chopra
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்துள்ள மும்பை இந்தியன்ஸ் 6-வது கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் 5 கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா தலைமையில் குஜராத், சென்னை உட்பட எஞ்சிய 9 அணிகளுக்கு கிடைக்காத சொந்த மண்ணில் விளையாடும் பொன்னான வாய்ப்பு அந்த அணிக்கு மட்டுமே கிடைத்தது. ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் பேட்டிங், பவுலிங்கில் மொத்தமாக சொதப்பிய அந்த அணி வரலாற்றிலேயே வரிசையாக முதல் 8 போட்டிகளில் தோல்வியடைந்த முதல் அணியாக சாதனை படைத்து அதிர்ச்சி கொடுத்தது. அத்துடன் மொத்தம் பங்கேற்ற 14 போட்டிகளில் வரலாற்றில் முதல் முறையாக 10 தோல்விகளை பதிவு செய்த அந்த அணி முதல் முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து அவமானத்தைச் சந்தித்தது.

சொதப்பிய பொல்லார்ட்:
அந்த அணியின் ரோகித் சர்மா, இசான் கிசான் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறியதே இவ்வளவு பெரிய தோல்வியை சந்திப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திர ஆல்ரவுண்டர் மற்றும் பினிஷராக கருதப்படும் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கைரன் பொல்லார்ட் படுமோசமாக பேட்டிங் செய்தது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. கடந்த 2010 முதல் மும்பை அணிக்காக விளையாடி வரும் அவர் தோற்க இருந்த எத்தனையோ போட்டிகளில் கடைசி நேரத்தில் களமிறங்கி சரவெடியாக பேட்டிங் செய்து எதிர்பாராத வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

மேலும் பந்து வீச்சிலும் அவ்வப்போது முக்கிய விக்கெட்டுகளை எடுத்து அவர் அந்த அணி 5 கோப்பையை வெல்வதற்கு துருப்பு சீட்டாக செயல்பட்டு ஒரு சிறந்த ஆல்-ரவுண்டராக வலம் வந்தார். அதன் காரணமாக இந்த வருடம் அவரை 6 கோடி என்ற நல்ல தொகைக்கு மும்பை அணி நிர்வாகம் தக்க வைத்தது. ஆனால் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல இந்த வருடம் ஆரம்பம் முதலே சுமாராக செயல்பட்டு வந்த அவர் மொத்தம் பங்கேற்ற 11 போட்டிகளில் வெறும் 144 ரன்களை 14.40 என்ற மோசமான சராசரியில் 107.46 என்ற மோசமான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்தார்.

ஆகாஷ் சோப்ராவின் வதந்தி:
அதேபோல் பந்து வீச்சிலும் வெறும் 4 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்த அவரை “பொல்லார்ட்டா இது” என்று ரசிகர்கள் பரிதாபமாக பார்க்கும் அளவுக்கு மோசமாக செயல்பட்டார். அதன் காரணமாக கடைசி 3 போட்டிகளில் பெஞ்சில் அமர வைக்கப்பட்ட அவருக்கு பதில் இளம் வீரர்களுக்கு மும்பை அணி நிர்வாகம் வாய்ப்பளித்தது. அந்த நிலைமையில் தற்போது 35 வயதைக் கடந்து விட்ட காரணத்தால் மோசமாக செயல்பட்ட அவரை அடுத்த வருடம் மும்பை நிர்வாகம் தக்க கழ்ற்றி விடும் என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார்.

- Advertisement -

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியிருந்தது பின்வருமாறு. “கைரன் பொல்லார்ட்டை கடைசியாக மும்பையில் பார்த்தோம் என்று நினைக்கிறேன். அவரை மும்பை நிர்வாகம் ரிலீஸ் செய்தால் 6 கோடிகளை மிச்சப்படுத்தலாம். அதேபோல் முருகன் (1.6 கோடி) அஸ்வினையும் அவர்கள் விடுவிப்பார்கள் என்று நினைக்கிறேன். மேலும் ஜெயதேவ் உனட்கட் (1.3 கோடி) பற்றி உறுதியாக தெரியாது. ஆனால் கண்டிப்பாக டைமல் மில்ஸ்க்கு (1.5 கோடி) அவர்கள் டாட்டா காட்ட போகிறார்கள்” என்று தெரிவித்திருந்தார். அதாவது மும்பைக்கு பாரமாக மாறிய பொல்லார்ட்டை அடுத்த வருடம் அந்த அணி நிர்வாகம் விடுவித்து 6 கோடியை மிச்சப்படுத்தி வேறு தரமான வீரரை வாங்கும் என்பதால் மும்பையில் அவரை பார்ப்பது இந்த வருடமே கடைசி என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆகாஷ் சோப்ரா பேசினார்.

வெளுத்த பொல்லார்ட்:
இந்நிலையில் அவையெல்லாம் வெறும் வதந்தி என்று நிரூபிக்கும் வகையில் கைரன் பொல்லார்ட் நேற்று இரவு ஒரு ட்வீட் போட்டார். அதில் அவர் குறிப்பிட்டது பின்வருமாறு. “இதனால் உங்களுக்கு ரசிக கூட்டங்கள் மற்றும் ஃபாலோயர்ஸ் அதிகரித்திருப்பார்கள் என்று நம்புகிறேன், இதை தொடருங்கள்” என்று பதிவிட்டிருந்தார். அதன் காரணமாக ஆகாஷ் சோப்ரா தெரிவித்தது வெறும் வதந்தி என்று தெரிந்து கொண்ட ரசிகர்கள் அவரின் சாயத்தை பொல்லார்ட் வெளுத்து விட்டதாக சமூக வலைதளங்களில் கலாய்க்க தொடங்கினார்.

இதையும் படிங்க : இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் – முழுஅட்டவணை அறிவிப்பு

இருப்பினும் தம்மால் அவருக்கு பிரச்சினை ஏற்படக் கூடாது என்று நினைத்த பொல்லார்ட் அந்த ட்வீட்டை டெலிட் செய்துவிட்டார். இருப்பினும் அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்த ரசிகர்கள் தற்போது ஆகாஷ் சோப்ராவை கலாய்த்து வருகின்றனர். பொதுவாகவே இந்தியாவிற்கும் ஐபிஎல் தொடரிலும் விளையாடியபோது பெரிய அளவில் சாதிக்காத அவர் ஒவ்வொரு நாளும் என்னமோ பெரிய வல்லுநர் போல் இதர வீரர்களை விமர்சிப்பதும் குறை கூறுவதையும் தனது யூடியூப் பக்கத்தில் வழக்கமாக வைத்துள்ளார். அதனால் பலமுறை கடுப்பில் உள்ள ரசிகர்கள் தற்போது பொல்லார்ட் விஷயத்தில் சிக்கியுள்ளதால் “இதெல்லாம் தேவையா” என்று விமர்சிக்கின்றனர்.

Advertisement