இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் – முழுஅட்டவணை அறிவிப்பு

INDvsWI
Advertisement

இந்தியாவில் தற்போது 15-வது ஐபிஎல் தொடரானது வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த நிலையில் அடுத்ததாக இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஜூன் 9-ஆம் தேதி முதல் 19-ம் தேதி வரை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் தொடரில் ஜொலித்த இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

INDvsRSA toss

இந்த தென் ஆப்ரிக்க தொடரினை தொடர்ந்து அடுத்ததாக அயர்லாந்து அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூன் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இரண்டாம் கட்ட இந்திய அணி லக்ஷ்மணன் பயிற்சியின் கீழ் பங்கேற்று விளையாட இருக்கிறது.

- Advertisement -

இவ்விரண்டு தொடர்களையும் அடுத்து இந்திய அணி ஜூலை 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை இங்கிலாந்தில் கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்ட ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாடுகிறது. அதோடு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேரடியாக நாடு திரும்பாமல் அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து ஒரு கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது.

INDvsWI

இந்த தொடர் ஜூலை 22ம் தேதி முதல் ஆகஸ்டு 7ஆம் தேதி வரை நடைபெறும் என்ற அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி இங்கிலாந்தில் இருந்து நேரடியாக வெஸ்ட் இண்டீஸ் செல்லும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் ஜூலை 22, 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன.

- Advertisement -

அதே போன்று டி20 போட்டிகள் ஜூலை 29-ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் ஏழாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. டி20 உலகக்கோப்பை தொடரானது அக்டோபர் மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற உள்ளதால் அந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணி போதுமான அளவு போட்டிகளில் விளையாடவே இப்படி அடுத்தடுத்த தொடர்கள் அட்டவணைப்படுத்தப்பட்ட உள்ளதாகவும் தகவல் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சென்னை எனது இன்னொரு வீடு, ஸ்கூல் கிரிக்கெட் ரொம்ப முக்கியம் – தமிழக மண்ணில் தோனி நெகிழ்ச்சி பேச்சு

இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரிலும் சீனியர் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்ட்டு இளம்வீரர்களை கொண்ட அணியே பங்கேற்கும் என்று தெரிகிறது. இருப்பினும் இந்த தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் பற்றிய பட்டியல் இதுவரை வெளியாகவில்லை. அடுத்தமாத துவக்கத்தில் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

Advertisement