எல்லாம் சரி, உடம்பை இன்னும் கொஞ்சம் கொறச்சா இன்னும் சூப்பரா விளையாடுவீங்க – இந்திய வீரருக்கு அக்தர் அட்வைஸ்

Shoaib Akhtar
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்று வந்த கிரிக்கெட் தொடர்கள் நிறைவு பெற்றுள்ளது. அதில் முதலாவதாக நடைபெற்ற 5-வது டெஸ்ட் போட்டியில் 378 ரன்களை அசால்டாக சேஸிங் செய்து வரலாற்று தோல்வியை பரிசளித்து 2 – 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்த இங்கிலாந்துக்கு கேப்டன் ரோகித் சர்மா திரும்பியதும் நடைபெற்ற டி20 தொடரில் அட்டகாசமாக செயல்பட்ட இந்தியா 2 – 1 (3) என்ற கணக்கில் தொடரை வென்று பதிலடி கொடுத்தது. அத்துடன் கடைசியாக நடந்த ஒருநாள் தொடரையும் போராடி 2 – 1 (3) என்ற கணக்கில் கோப்பையை வென்று வெற்றியுடன் இந்த சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ளது.

IND vs ENG TEam INDIA

- Advertisement -

இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக பர்மிங்காமில் நடந்த 5-வது டெஸ்ட் போட்டியில் 98/5 என திணறிய போது ஜடேஜா உடன் இணைந்து 222 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து சரவெடியாக பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் 145 (111) ரன்கள் விளாசி டி20 இன்னிங்ஸ் விளையாடி இந்தியாவை செங்குத்தாக தூக்கி நிறுத்தினார். இருப்பினும் கடைசி இன்னிங்சில் இந்திய பவுலர்கள் சிறப்பாக செயல்பட தவறியதால் வெற்றி பறிபோனது. அந்த நிலைமையில் நடைபெற்ற டி20 தொடரில் இதற்கு முந்தைய காலங்களில் மிடில் ஆர்டரில் களமிறங்கி சொதப்பினார் என்பதற்காக சில முன்னாள் வீரர்களின் கோரிக்கையை ஏற்று தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

நிரூபித்த பண்ட்:
அதிலும் சுமாராக செயல்பட்ட ரிஷப் பண்ட் மீண்டும் வெள்ளை பந்து கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்ற வகையில் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். அந்த நிலைமையில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் சூரியகுமார் யாதவ் விளையாடும் 4-வது இடத்தில் விளையாடும் வாய்ப்பை ரோகித் சர்மா அவருக்கு வழங்கினார். அதில் 2-வது போட்டியில் டக் அவுட்டான அவர் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது போட்டியில் 72/4 என இந்தியா சறுக்கிய போது ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து 133 ரன்கள் அபார பார்ட்னர்ஷிப் அமைத்து ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்து இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தார்.

Rishabh Pant IND vs ENG Rohit Sharma

குறிப்பாக கடைசி 25 ரன்கள் தேவைப்பட்ட போது 4, 4, 4, 4, 4, 1, 4 என அடுத்தடுத்த பவுண்டரிகளை தெறிக்கவிட்ட அவர் 125* (113) ரன்கள் விளாசி இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்ட நாயகன் விருதை வென்றார். அதைவிட வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலும் தம்மால் சிறப்பாக விளையாட முடியும் என்று விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கடந்த 2018இல் அறிமுகமாகி இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற சவாலான வெளிநாடுகளில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற தோனியால் முடியாத சாதனையை படைத்துள்ள அவர் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலும் அசத்த துவங்கியுள்ளார்.

- Advertisement -

உடம்பை குறைக்கணும்:
பிரிஸ்பேன், மான்செஸ்டர், அஹமதாபாத் என சமீப காலங்களில் உலக அளவில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அபாரமாக செயல்பட்டு வரும் அவர் 24 வயதிலேயே சில வரலாற்று வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் வீரராக உருவெடுத்துள்ள ரிஷப் பண்ட் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் திறமையில் எந்த குறையுமில்லை என்று தெரிவிக்கும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயப் அக்தர் அவரின் உடல் எடையை சற்று குறைத்து ஃபிட்டாக இருந்தால் வருங்காலங்களில் காயங்களை தவிர்த்து இன்னும் நிறைய வரலாற்று வெற்றிகளை பெற்றுக்கொடுக்க உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

Akhtar

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அவரிடம் கட், புல், ரிவர்ஸ் ஸ்வீப் என அனைத்து விதமான ஷாட்களும் உள்ளது. அதை விளையாட அவரும் பயப்படுவதில்லை. அவர் ஆஸ்திரேலியாவிலும் இங்கிலாந்திலும் இந்தியாவுக்கு சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். இருப்பினும் அவர் சற்று அதிக எடையுடன் காணப்படுகிறார். எனவே அதில் கவனம் செலுத்துவார் என்று நம்புகிறேன். ஏனெனில் இந்திய மார்க்கெட் மிகவும் பெரியது”

- Advertisement -

“நல்ல வீரராக இருக்கும் அவர் விளம்பரங்களில் நடித்து இன்னும் நிறைய கோடிகளை சம்பாதிக்க முடியும். பொதுவாகவே இந்தியாவில் அது போன்ற நட்சத்திர வீரர்கள் மீது அனைவரும் நிறைய முதலீடு செய்வார்கள். அவரிடம் இருக்கும் திறமைக்கு எதிரணிகளுக்கு மிகவும் தொல்லை கொடுக்கிறார்.

இதையும் படிங்க : ENG vs RSA : கடைசி வரை இந்த விஷயம் நடக்காமலே தெ.ஆ ஜெயிச்சிட்டாங்க – புதுசா இல்ல இருக்கு

இங்கிலாந்துக்கு எதிரான அந்தப் போட்டியில் முதலில் கால சூழ்நிலைக்கு உட்படுத்திக் கொண்டு நிதானத்தை காட்டிய அவர் பின்னர் விரும்பிய அளவுக்கு அதிரடியாக வெளுத்து வாங்கினார். ரிஷப் பண்ட் வருங்காலத்தில் சூப்பர் ஸ்டாராக வரப்போகிறார். அவரை நிறுத்துவதற்கு அவரால் மட்டுமே முடியும்” என்று கூறினார்.

Advertisement