தெ.ஆ இல்ல.. அந்த டெஸ்ட் சீரிஸ் தான் உங்களுக்கு பெரிய சவாலா இருக்கும்.. இந்திய வீரரை எச்சரித்த கம்பீர்

Gautam Gambhir 6
- Advertisement -

தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்தியா விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 26ஆம் தேதி துவங்குகிறது. கிறிஸ்துமஸ் தினத்தின் அடுத்த நாளான பாக்ஸிங் டேவில் துவங்க உள்ள இத்தொடர் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ளது. அதில் தென்னாபிரிக்காவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா விளையாட உள்ளது என்றே சொல்லலாம்.

காரணம் 1992 முதல் இதுவரை தென்னாப்பிரிக்காவில் விளையாடிய தொடர்களில் ஒன்றை கூட வெல்ல முடியாமல் இந்தியா தடுமாறி வருகிறது. எனவே இம்முறை அந்த மோசமான வரலாற்றை மாற்றுவதற்காக ரோகித் சர்மா தலைமையில் மூத்த வீரர்களுடன் களமிறங்க உள்ள இந்திய அணியில் விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

உண்மையான சவால்:
ஏனெனில் ரிஷப் பண்ட் காயத்தால் விலகியுள்ள நிலையில் இசான் கிசான் சொந்த காரணங்களுக்காக இத்தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். மேலும் கேஎஸ் பரத் தென்னாப்பிரிக்க பவுலர்களுக்கு எதிராக தாக்குப் பிடிக்க மாட்டார் என்பதால் 2023 உலகக் கோப்பையில் அபாரமாக விளையாடிய ராகுல் இத்தொடரில் விக்கெட் கீப்பராக விளையாடுவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது.

இந்நிலையில் ரிஷப் பண்ட் வரும் வரை ராகுல் விக்கெட் கீப்பராக செயல்படுவது வரவேற்கத்தக்கும் முடிவு என கௌதம் கம்பீர் பாராட்டியுள்ளார். இருப்பினும் இத்தொடரை விட சுழலுக்கு சாதகமான மைதானங்களைக் கொண்ட இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தான் ராகுல் கீப்பிங் செய்வதற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார்ட் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“கேஎல் ராகுல் தென்னாப்பிரிக்க மண்ணில் விக்கெட் கீப்பிங் செய்வது சவால் கிடையாது. மாறாக இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் தாறுமாறாக சுழலக்கூடிய மைதானங்களில் அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகியோரின் பந்துகளை கீப்பிங் செய்வதே அவருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். அதை விட பெரிய சவாலும் இருக்க முடியாது. இருப்பினும் தொலைநோக்கு பார்வையுடன் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்று நான் கருதுகிறேன்”

இதையும் படிங்க: இதை ரசிகர்களிடம் அடிக்கடி போட்டு காட்டுங்க.. விராட் கோலி பற்றிய கேள்விக்கு கம்பீர் அன்பான பதில்

“உங்களிடம் கேஎஸ் பரத் மட்டுமே இருக்கிறார். எனவே ரிசப் பண்ட் வரும் வரை கே.எல் ராகுல் இந்திய அணியில் விக்கெட் கீப்பிங் செய்யும் வேலையை அனுமதிக்கலாம்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து முதல் போட்டி நடைபெற உள்ள செஞ்சூரியன் மைதானத்தில் இந்திய அணியினர் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement