இதை ரசிகர்களிடம் அடிக்கடி போட்டு காட்டுங்க.. விராட் கோலி பற்றிய கேள்விக்கு கம்பீர் அன்பான பதில்

Gautam Gambhir 5Gautam Gambhir 5
- Advertisement -

முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 உலகக் கோப்பை ஆகிய தொடர்களில் ஃபைனலில் மிகச் சிறப்பாக விளையாடி அதிகபட்ச ஸ்கோர் அடித்து இந்தியா சாம்பியன் பட்டங்களை வெல்ல உதவினார். அந்த வகையில் உலகக்கோப்பை நாயனாக போற்றப்படும் அவர் ஓய்வுக்கு பின் வர்ணனையாளராகவும் பயிற்சியாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

இருப்பினும் வர்ணனையாளராக செயல்படும் சமயங்களில் அவர் எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோரை அதிரடியாக விமர்சிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். குறிப்பாக தம்முடைய சொந்த மாநிலத்தைச் சேர்ந்த விராட் கோலியை நன்றாக செயல்பட்டாலும் குறை சொல்வதை வழக்கமாக வைத்திருப்பதால் அவர் மீது நிறைய ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

- Advertisement -

கம்பீரின் அன்பு:
அதை விட 2023 ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் பயிற்சியாளராக இருந்த அவர் விராட் கோலியுடன் நெஞ்சோடு நெஞ்சாக மோதும் அளவுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மொத்தத்தில் இந்த செயல்பாடுகளால் தற்போது விராட் கோலி என்றாலே கௌதம் கம்பீருக்கு பிடிக்காது என்ற எண்ணம் ரசிகர்களிடையே இருக்கிறது.

இந்நிலையில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதிய 3வது போட்டியில் வர்ணனையாளராக செயல்பட்ட கௌதம் கம்பீரிடம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் தொகுப்பாளர் ஒரு கேள்வி எழுப்பினார். அதாவது சமீபத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் 50வது சதமடித்து சாதனை படைத்த விராட் கோலி எந்த பவுலருக்கு எதிராக அந்த சாதனையை படைத்தார் என்ற கேள்வியை தொகுப்பாளர் எழுப்பினார்.

- Advertisement -

அதற்கு சில வினாடிகள் யோசித்த கௌதம் கம்பீர் உடனடியாக “லாக்கி பெர்குசன்” என்று சரியான விடையை பதிலளித்தது அருகில் இருந்த மற்றொரு முன்னாள் இந்திய வீரர் பியூஸ் சாவ்லாவை வியப்பில் ஆழ்த்தியது. அதாவது 2023 உலகக் கோப்பையில் மும்பையில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான செமி ஃபைனலில் லாக்கி பெர்குசன் வீசிய பந்தில் தான் விராட் கோலி 50வது சதமடித்தார். இருப்பினும் நிறைய ரசிகர்களே மறந்து போன அந்த தருணத்தை கௌதம் கம்பீர் இன்னும் நினைவில் வைத்து சரியாக பதிலளித்தது ஆச்சரியமாக அமைந்தது.

இதையும் படிங்க: ரோஹித்துக்கு செய்த அவமானம்.. மும்பை தலையில் விழும் இடி? பாண்டியா காயம் பற்றி வெளியான அப்டேட் இதோ

அதனால் ஆச்சரியத்தை வெளிப்படுத்திய பியூஸ் சாவ்லா மற்றும் தொகுப்பாளரிடம் “இந்த வீடியோவை மீண்டும் மீண்டும் அனைவரிடமும் போட்டு காட்டுங்கள். நான் அனைத்தையும் நினைவில் வைத்துள்ளேன். என்னுடைய சண்டை எல்லாம் களத்தில் மட்டும் தான்” என்று சிரித்த முகத்துடன் கௌதம் கம்பீர் அன்பாக கூறினார். அதாவது விராட் கோலியுடன் போடும் சண்டைகள் எல்லாம் களத்தில் மட்டும் தான் என்று தெரிவித்த கம்பீர் அவருடைய சாதனைகளை எப்போதும் நினைவில் வைத்திருப்பதாக தேர்வித்தது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement