எனது பந்துவீச்சை அடித்து எனக்கு தொந்தரவு தரும் வீரர்கள் இவர்கள்தான் – மனம்திறந்த ஹாக்

Hogg
- Advertisement -

கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் தற்போது மார்ச் 29ஆம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கு அடுத்தும் இந்த தொடர் நடை பெறுவது சந்தேகம்தான் என்று தெரிகிறது. இந்தியாவில் மக்களின் இயல்புவாழ்க்கை திரும்பவே இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால் அடுத்த சில மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டி என்பது கிடையாது என்றே தோன்றுகிறது.

hogg

- Advertisement -

இந்நிலையில் ஐபிஎல் தொடரின்போது தனக்கு அதிக தொல்லை கொடுத்த பேட்ஸ்மேன்கள் 6 பேரின் பெயர்களை கூறியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக். இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த மாதம் மார்ச் 29 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது ஆனால் கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏப்ரல் 15ஆம் தேதிக்கு இந்த தொடர் தள்ளிவைக்கப்பட்டது. ஆனாலும் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு பின்னரும் நடக்குமா என்பது கேள்விக்குறிதான்.

இந்நிலையில் இந்த தொடரில் கடந்த பல வருடங்களாக பங்கேற்ற ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தனக்கு தொல்லை கொடுத்த பேட்ஸ்மேன்கள் பற்றி கூறியுள்ளார். இவர் ஒரு சுழற்பந்துவீச்சாளர் ஆவார். இவர் கூறிய இந்த பட்டியலில் இந்திய ஜாம்பவான் வீரரான சுரேஷ் ரெய்னா, விராத் கோலி, சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி ஆகியோரது பெயர்கள் இல்லை. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் :

Hogg

நான் பவுலிங் செய்த வீரர்கள் பற்றி சிந்தித்தேன். அப்போது நாம் ஏன் நமக்கு தொல்லை கொடுத்த பேட்ஸ்மேன்கள் பெயர்களை தயாரிக்க கூடாது என்று எண்ணினேன். இதில் ஐபிஎல் தொடரில் எனக்கு தொல்லை கொடுத்த 6 பேட்ஸ்மேன்கள் பட்டியலை தயாரித்தேன். அவர்கள் அனைவருக்கும் பந்து வீசும் போது மிகப் பெரிய அச்சத்தையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தினர்.

- Advertisement -

அவர், வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் முதலில் வருவது மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த கெரோன் பொல்லார்ட் ஆவார். அதனை தொடர்ந்து தற்போது கொல்கத்தா அணியின் கேப்டனாக இருக்கும் தினேஷ் கார்த்திக், மூன்றாவதாக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் மேக்ஸ்வெல் அடுத்து டெல்லி அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட், கடைசியாக சிக்சர் மன்னன் கிறிஸ் கெய்ல் உள்ளனர்.

Pollard

இந்த பட்டியலில் இந்திய வீரர்களான மகேந்திர சிங் தோனி, விராட் கோலி ஆகியோர் இல்லை. அவர்கள் ஏன் இல்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான இவரின் கருத்துக்களுக்கு இந்திய ரசிகர்களின் மத்தியில் அதிகமான வரவேற்பு இருப்பதால் ரசிகர்கள் அவரிடம் தொடர்ந்து கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். அவரும் தன்னால் முடிந்த அளவு அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement