பார்ட்னர்ஷிப் போடுவதில் வரலாற்று சாதனை படைத்த ராகுல் – டீ காக் ! மொத்த சாதனை பட்டியல் இதோ

Quinton De Kock KL Rahul 2
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே 18-வது தேதி நடைபெற்ற 66-வது போட்டியில் லக்னோ மற்றும் கொல்கத்தா அணிகள் சந்தித்தன. நவி மும்பையில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் தைரியமாக பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் குயின்டன் டி காக் ஆகியோர் முதல் ஓவரிலிருந்தே அதிரடியை வெளிப்படுத்தினர். பவர்பிளே ஓவர்களில் பட்டைய கிளப்பிய இந்த ஜோடி நேரம் செல்ல செல்ல பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக பறக்கவிட தொடங்கியது.

Quinton De Kock KL Rahul 2

- Advertisement -

ஒவ்வொரு ஒவ்வொருக்கும் குறைந்தது 10 ரன்களை விளாசிய இந்த ஜோடியில் ஒரு கட்டத்தில் இருவருமே அரைசதம் கடந்த போதிலும் 10 ஓவர்களைத் தாண்டி 100 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த போதிலும் அவுட்டாகாமல் அடம் பிடித்தார்கள். இவர்களை அவுட் செய்ய கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் போட்ட அத்தனை திட்டங்களையும் அடித்து நொறுக்கிய இந்த ஜோடி சோர்வடைந்த கொல்கத்தா பவுலர்களை மேலும் புரட்டி எடுத்தது.

சாதனை பட்டியல்:
ஒரு கட்டத்துக்கு பின்பு அதிரடியை நிறுத்திய கேப்டன் கேஎல் ராகுல் கம்பெனி கொடுக்க மறுபுறம் விஸ்வரூபம் எடுத்த குயின்டன் டி காக் கொல்கத்தா பவுலர்களுக்கு கொஞ்சம் கூட கருணை காட்டாமல் அனலாக பேட்டிங் செய்து சதமடித்தார். ஆனாலும் திருப்தியடையாத இந்த ஜோடியில் சதமடித்தும் ஓயாமல் பந்தாடிய குயின்டன் டி காக் கடைசி நேரத்தில் முரட்டுத்தனமாக பேட்டிங் செய்து கடைசி வரை அவுட்டாகாமல் 10 பவுண்டரி 10 சிக்ஸர்களை பறக்கவிட்டு 70 பந்துகளில் 140* ரன்களை விளாசினார். அவருக்கு கம்பெனி கொடுத்த கேப்டன் ராகுல் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 68* (51) ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் லக்னோ 210/0 ரன்கள் சேர்த்தது.

LSG vs KKR Quintan De Kock

1. கடந்த 2008 முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் வரலாற்றில் முதலில் பேட்டிங் செய்த அணி ஒரு விக்கெட் கூட இழக்காமல் 200 ரன்களை கடந்தது இதுவே முதல் முறையாகும். அந்த வகையில் 20 ஓவர்களில் ஒரு விக்கெட் கூட விடாமல் முழுமையாக பேட்டிங் செய்த முதல் அணியாக லக்னோ சாதனை படைத்தது.

- Advertisement -

2. மேலும் ஐபிஎல் வரலாற்றில் 20 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்த முதல் ஓபனிங் ஜோடியாக கேஎல் ராகுல் – குவின்டன் டி காக் புதிய வரலாறு படைத்தனர்.

3. அத்துடன் 210 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்த குயின்டன் டி காக் கேஎல் ராகுல் ஜோடி ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடியாக புதிய வரலாற்று சாதனை படைத்தது. அந்த பட்டியல் இதோ:
1. குயின்டன் டீ காக் – கேஎல் ராகுல் (லக்னோ) : 210*, கொல்கத்தாவுக்கு எதிராக, 2022*
2. டேவிட் வார்னர் – ஜானி பேர்ஸ்டோ (ஹைதெராபாத்) : 185, பெங்களூருவுக்கு எதிராக, 2019
3. கெளதம் கம்பீர் – கிறிஸ் லின் (கொல்கத்தா) : 185*, குஜராத்துக்கு எதிராக, 2017
4. கேஎல் ராகுல் – மயங் அகர்வால் (பஞ்சாப்): 183, ராஜஸ்தானுக்கு எதிராக, 2020
5. ருதுராஜ் கைக்வாட் – டேவோன் கான்வே (சென்னை) : 182, ஹைதெராபாத்க்கு எதிராக, 2022

- Advertisement -

4. இப்போட்டியில் கொல்கத்தா பந்துவீச்சை வதம் செய்த இந்த ஜோடி ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தாவுக்கு எதிராக எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற வரலாற்றையும் அவர்கள் படைத்தனர். அந்தப் பட்டியல் இதோ:
1. கேஎல் ராகுல் – குயின்டன் டீ காக் : 210*, 2022*
2. ஹெர்சல் கிப்ஸ் – ரோஹித் சர்மா : 167, 2012

5. அதோடு ஐபிஎல் வரலாற்றில் எந்த ஒரு விக்கெட் எடுக்கும் அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த 3-வது ஜோடியாகவும் அவர்கள் சாதனை படைத்தனர். அந்தப் பட்டியல் இதோ:
1. விராட் கோலி – ஏபி டீ வில்லியர்ஸ் : 229
2. விராட் கோலி – ஏபி டீ வில்லியர்ஸ் : 219*
3. குவின்டன் டி காக் – கேஎல் ராகுல் : 210*

- Advertisement -

6. ஐபிஎல் வரலாற்றில் அதிக பந்துகளை எதிர்கொண்ட ஜோடி என்ற பெருமையையும் அவர்கள் பெற்றனர். அந்தப் பட்டியல் இதோ:
1. குயின்டன் டி காக் – கேஎல் ராகுல் (லக்னோ) : 120 பந்துகள் (210 ரன்கள்) , கொல்கத்தாவுக்கு எதிராக, 2022*
2. மனிஷ் பாண்டே – ராபின் உத்தப்பா (புனே): 112 பந்துகள் (145 ரன்கள்), டெல்லிக்கு எதிராக 2012

7. மேலும் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் அவுட்டாகாமல் கடைசிவரை நின்ற 2-வது ஓப்பனிங் ஜோடியாகவும் அவர்கள் சாதித்தனர். அந்த பட்டியல்:
1. பாலாஜி பாய் – லூயிஸ் ப்ரூஸ் (கிப்ரால்டர்) : 216*, பால்கெரியாவுக்கு எதிராக, 2022
2. கேஎல் ராகுல் – குவின்டன் டி காக் (லக்னோ) : 210*, கொல்கத்தாவுக்கு எதிராக,, 2022*

கொல்கத்தா வதம்:
அதை தொடர்ந்து 211 என்ற பெரிய இலக்கை துரத்திய கொல்கத்தாவுக்கு வெங்கடேஷ் ஐயர் 0, அபிஜித் தோமர் 4 (8) என தொடக்க வீரர்கள் ஏமாற்றிய நிலையில் அடுத்து வந்த நித்திஸ் ராணா அதிரடியாக 42 (22) ரன்களும் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 50 (29) ரன்களும் எடுத்து போராடி ஆட்டமிழந்தனர். அந்த நிலையில் வந்த சாம் பில்லிங்ஸ் அதிரடியாக 36 (24) ரன்களில் அவுட்டாக நம்பிக்கை நட்சத்திரம் ஆண்ட்ரே ரசல் 5 (11) பந்துகளில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

Evin Lewis Rinu SIngh Catch

இருப்பினும் கடைசி நேரத்தில் ரிங்கு சிங் – சுனில் நரேன் ஆகியோர் ஜோடி போட்டி சிக்ஸர்களை பறக்க விட்டதால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது கடைசி ஓவரில் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்ட போது மார்கஸ் ஸ்டோனிஸ் வீசிய கடைசி ஓவரில் எதிர்கொண்ட இளம் இந்திய வீரர் ரின்கு சிங் 4, 6, 6, 2 என 18 ரன்கள் குவித்து 5-வது பந்தில் துரதிஸ்டவசமாக கேட்ச் கொடுத்து 2 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 40 (15) ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க : கொல்கத்தாவின் போராட்ட வெற்றியை நிறுத்திய சீசனின் பெஸ்ட் கேட்ச் ! ரசிகர்களின் மனதை வென்ற இளம் வீரர்

அதனால் கடைசி பந்தில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவைப்பட்ட போது களமிறங்கிய உமேஷ் யாதவை கிளீன் போல்டு செய்த மார்க்கஸ் ஸ்டோனிஸ் 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அந்த வெற்றியால் லக்னோ 2-வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. கொல்கத்தா 3-வது அணியாக வெளியேறியது.

Advertisement